» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

திமுக அரசு பிரிவினைவாதத்துடன் செயல்படுகிறது: நயினார் நாகேந்திரன் குற்றச்சாட்டு

செவ்வாய் 15, ஏப்ரல் 2025 4:04:16 PM (IST)

திமுக அரசு பிரிவினைவாதத்துடன் செயல்படுகிறது என்று பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் குற்றம்சாட்டியுள்ளார். 

தமிழக சட்டப்பேரவையில் மாநில சுயாட்சி தீர்மானம் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. முதல்வர் மு.க ஸ்டாலின் இந்த தீர்மானத்தை தாக்கல் செய்தார். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து, சட்டப்பேரவையில் இருந்து பாஜக வெளிநடப்பு செய்தது.

பின்னர் இது குறித்து நயினார் நாகேந்திரன் செய்தியாளர்களுக்கு அளித்தப் பேட்டியில், "பொன்முடியை அமைச்சர் பதவியில் இருந்து நீக்க வேண்டும். யாரெல்லாம் பெண்களை பற்றி கேவலமாக பேசுகிறார்களா, அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.

தெலுங்கு, மலையாளம் பேசுபவர்கள் தமிழகத்தில் இருக்கிறார்கள். மும்மொழிக் கொள்கையில் இந்தி மொழி திணிக்கப்படவில்லை. மாணவர்கள் விருப்ப மொழியை தேர்வு செய்து படிக்கலாம் என கூறப்படுகிறது. திமுக அரசு மாநிலங்களை பிரிக்க வேண்டும் என்ற, பிரிவினை வாதத்துடன் செயல்படுகிறது. இந்தியா ஒற்றுமையாக இருக்க வேண்டும் என அவர்கள் நினைக்கவில்லை. தனி தமிழ்நாடு, தனி கொடி வேண்டும் என முதல்வர் ஸ்டாலின் நினைக்கிறார்.

நாடு வல்லரசாக மாற வேண்டும் என்றால், எல்லா மாநிலங்களும் ஒன்றாக தான் இருக்க வேண்டும். எல்லாம் மாநிலங்களும் ஒன்றாக இருந்தால் தான், நாடு வளர்ச்சி அடைய முடியும் என்று அம்பேத்கர் கூறினார். இந்திய நாடு பல மாநிலங்களாக பிரிக்கப்பட்டதற்கான காரணமே, நிர்வாக வசதி சீராக இருக்க வேண்டும் என்பதற்காக தான்.

ஆனால் தேர்தலை முன்னிறுத்தி எதாவது தீர்மானத்தை கொண்டுவர வேண்டும் என அவர்கள் நினைக்கிறார்கள். இது மக்களுக்கும், தேசத்துக்கும் விரோதமானது. மக்கள் இதை சிந்தித்து, தேசிய ஜனநாயக கூட்டணிக்கு வாக்களிக்க வேண்டும். இனி திமுக ஆட்சி தொடர வாய்ப்பே இல்லை.” என்றார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads


CSC Computer Education




Arputham Hospital


New Shape Tailors




Thoothukudi Business Directory