» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

விஜயாபதியில் ரூ.14.77 கோடியில் சர்வதேச விளையாட்டரங்கம் : ஆட்சியர் ஆய்வு

வியாழன் 24, ஏப்ரல் 2025 4:11:50 PM (IST)



இராதாபுரம் அருகே விஜயாபதியில் ரூ.14.77 கோடி மதிப்பீட்டில் சர்வதேச தரத்திலான விளையாட்டரங்கம் அமைக்க தேர்வு செய்யப்பட்டுள்ள இடத்தினை மாவட்ட ஆட்சியர் இரா.சுகுமார், ஆய்வு செய்தார். 

திருநெல்வேலி மாவட்டம், இராதாபுரம் வட்டம், விஜயாபதி கிராமத்தில் ரூ.14.77 கோடி மதிப்பீட்டில் சர்வதேச தரத்திலான விளையாட்டரங்கம் அமைக்க தேர்வு செய்யப்பட்டுள்ள இடத்தினை மாவட்ட ஆட்சியர் இரா.சுகுமார், இன்று (24.04.2025) பார்வையிட்டு, ஆய்வு செய்தார்.

தமிழ்நாடு முதலமைச்சர் பாளையங்கோட்டை அரசு மருத்துவக்கல்லூரி மைதானத்தில் கடந்த 2022-ஆம் ஆண்டு செப்டம்பர் 7-ஆம் தேதி நடந்த அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவில் கலந்து கொண்டு, நெல்லை மாவட்டத்தில் கடலோரப் பகுதிகளில் விளையாட்டு வீரர்கள் அதிகம் இருக்கின்றனர். அவர்களை ஊக்குவிக்கும் வகையில் சர்வதேச போட்டிகளில் பங்கேற்பதற்காவும், அவர்களின் திறமையினை மேம்படுத்துவதற்காகவும் இராதாபுரத்தில் விளையாட்டு மற்றும் பயிற்சி மையத்துடன் கூடிய சர்வதேச விளையாட்டு அரங்கம் அமைக்கப்படும் என அறிவித்தார்கள்.

அதனைத்தொடர்ந்து, இராதாபுரம் வட்டம், விஜயாபதி கிராமத்தில் 10 ஏக்கரில் நிலம் தேர்வு செய்யப்பட்டு, தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டதை தொடர்ந்து, ரூ.14.77 கோடி மதிப்பில் விளையாட்டரங்கம் அமைப்பதற்கு தமிழ்நாடு அரசு ஆணை பிறப்பித்துள்ளது.

இவ்விளையாட்டு அரங்கத்தில் ஆடை அறையுடன் கூடிய கேலரி, நீளம் தாண்டுதல், பல்நோக்கு பயிற்சி கூடம் உட்புற கைப்பந்து மைதானம், இறகு பந்து உள்விளையாட்டரங்கம், உடற்பயிற்சி கூடம், தடகளப் பாதை, கால்பந்து, கூடைப்பந்து, கைப்பந்து, கபடி, உட்புற உடற்பயிற்சி கூடம், ஆண் பெண் கழிப்பறை, செக்யுரிட்டி கேபின், சுற்றுச்சூழல் மழைநீர் சேகரிப்பு, ஆழ்துளை கிணறு போன்ற அனைத்து கட்டமைப்பு வசதிகளுடன் கூடிய சர்வதேச விளையாட்டு அரசங்கம் மற்றும் பயிற்சி மையம் அமைக்கப்பட உள்ளது.

அதன் ஒரு பகுதியாக, கட்டுமான பணிகளை விரைவில் தொடங்கப்படவுள்ளதை தொடர்ந்து, சர்வதேச தரத்திலான விளையாட்டரங்கம் அமைக்க தேர்வு செய்யப்பட்டுள்ள இடத்தினை மாவட்ட ஆட்சியர் இன்று நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார். அதனைத் தொடர்ந்து, திசையன்விளையில் நீதிமன்றம் அமைப்பதற்கான இடம் தேர்வு செய்வதற்காக மாவட்ட ஆட்சியர் ஆய்வு மேற்கொண்டார். ஆய்வின் போது, இராதாபுரம் வட்டாட்சியர் கிருஷ்ணகுமார், திசையன்விளை வட்டாட்சியர் நாராயணன் உட்பட துறைசார்ந்த அலுவலர்கள் கலந்து கொண்டனர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

K.CHINNADURAI & CO AND GOLD HOUSE

Sponsored Ads


Arputham Hospital


CSC Computer Education






Thoothukudi Business Directory