» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

மாணவர்கள் ஆதார் வைத்துள்ளார்களா என ஆசிரியர்கள் சரிபார்க்க வேண்டும் : ஆட்சியர் அறிவுறுத்தல்

வெள்ளி 4, ஏப்ரல் 2025 3:41:07 PM (IST)



பள்ளி மாணவ மாணவியர்கள் ஆதார் உட்பட அனைத்து சான்றிதழ்களும் வைத்துள்ளார்களா என்பதை தலைமையாசிரியர்கள் சரிபார்க்க வேண்டும் என மாவட்ட ஆட்சியர் ஆர்.அழகுமீனா அறிவுறுத்தினார். 

கன்னியாகுமரி மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் பள்ளி கல்வித் துறை சார்பில், ஒருங்கிணைந்த கல்வி (சமக்கிரா சிக்ஷா) அலுவலர்களுக்கான மீளாய்வு கூட்டம் மாவட்ட ஆட்சியர் ஆர்.அழகுமீனா, தலைமையில் நடைபெற்றது. 

இக்கூட்டத்தில் ஆட்சியர் பேசுகையில்: ஒருங்கிணைந்த கல்வி தொடர்பான அனைத்து கூறுகளும் மீளாய்வு செய்யப்பட்டன. இம்மீளாய்வில் பள்ளியில் பயின்று வரும் ஆதார் இல்லா மாணவர்களுக்கான ஆதார் பெறுதல், ஆதார் பெற்றிருக்கும் மாணவர்கள் அதனை உரிய காலத்தில் புதுப்பித்தல் செய்தல், மாணவர்களின் வங்கிக் கணக்கினை இஎம்ஐஎஸ் இணையதளத்தில் பதிவேற்றம் செய்தல், வங்கி கணக்கு இல்லா மாணவர்களை வங்கி கணக்குகள் தொடங்க வைத்தல், அதன் மூலம் மாணவர்களின் பல்வேறு நலத்திட்டங்கள் பெற வழிவகை செய்தல், பள்ளிகளில் பயன்பாட்டில் இருந்து வரும் கணினி வழி கற்றல் மையங்கள், புதிதாக அமைக்கப்பட்ட கணினி கற்றல் வழி மைய ஆய்வகங்கள், பள்ளிகளில் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ள வளமிகு வகுப்பறைகள், பள்ளிகளுக்கு அளிக்கப்பட்ட இணையதள வசதிகள், ஆசிரியர்களுக்கு வழங்கப்பட்டுள்ளதான குறுங்கணினி பயன்பாடுகள், அனைவருக்கும் இலவச மற்றும் கட்டாய கல்வி உரிமைச் சட்டத்தின் கீழ் தனியார் பள்ளிகளுக்கு வழங்கப்பட்டுள்ள 25% இட ஒதுக்கீடுகள், அவற்றிற்காக அரசு வழங்கப்பட்டுள்ள நிதிகள் உள்ளிட்டவைகள் குறித்து கலந்தாலோசிக்கப்பட்டது. 

தொடர்ந்து பள்ளிகளில் செயல்படுத்தப்பட்டு வரும் பல்வேறு வகையான மன்றம் சார்ந்த செயல்பாடுகள், வானவில் மன்றம், இலக்கிய மன்றம், வினாடி வினா மன்றம், சிறார் திரைப்பட மன்றம் சார்ந்த போட்டிகள், கலைத்திருவிழா போட்டிகளில் மாணவர்கள் பங்கேற்றமை சார்ந்த விவரங்கள், மாற்றுத்திறனாளி குழந்தைகளுக்கு அளிக்கப்பட்டு வரும் உதவித்தொகைகள் மற்றும் மாற்றுத்திறனாளி குழந்தைகள் ஆயத்த மைய செயல்பாடுகள், 

மாற்றுத்திறனாளி குழந்தைகளுக்கு அளிக்கப்படும் பயிற்சிகள், மாற்றுத்திறனாளி குழந்தைகளுக்கு தேவைப்படும் உதவி உபகரணங்கள், அம்மாணாக்கருக்கு வழங்கப்படுகிறதான போக்குவரத்து பயணப்படி, மேம்பாட்டு படி, பெண் குழந்தைகளுக்கான உதவி நிதி சார்ந்த விபரங்கள், தொழிற்கல்வி பிரிவில் படிக்கும் குழந்தைகளுக்கு வழங்கப்படுகிறதான பயிற்சிகள், ஆசிரிய பயிற்றுனர் மற்றும் மாவட்ட ஒருங்கிணைப்பாளர்களின் பள்ளி பார்வை விவரங்கள், 

இல்லம் தேடி கல்வி சார்ந்த செயல்பாட்டு பணிகள், எண்ணும் எழுத்தும் மாணவர்களின் அடைவுகள், வாசிப்பு இயக்கம் மற்றும் வாசிப்பு இயக்கத்தின் மூலம் பள்ளிகளுக்கு வழங்கப்பட்ட புத்தகங்களின் பயன்பாடுகள், பள்ளி செல்லா மாணவர்கள் சார்ந்த விவரங்கள், பள்ளி உட்கட்டமைப்பு வசதிகள் மற்றும் அவற்றை மேம்படுத்துதல், பள்ளி மேலாண்மை குழு சார்ந்த தீர்மானங்கள், பள்ளிகளுக்கு இத்திட்டத்தின் மூலம் வழங்கப்பட்ட பள்ளி மானியங்கள், நம்ம ஸ்கூல் நம்ம ஊரு பள்ளி திட்டத்தின் கீழ் பயனடையும் பள்ளிகளின் விவரங்கள், பள்ளி இல்லா குடியிருப்புகளில் இருந்து வரும் குழந்தைகளுக்கு வழங்கப்படுகிறதான போக்குவரத்து நிதிகள் முதலான பல்வேறு கூறுகள் குறித்து ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. 
 
இக்கூறுகள் ஒவ்வொன்றும் மாணவர் நலனை அடிப்படையாகக் கொண்டதால் இதில் எவ்வித சுணக்கம் இல்லாதபடி அனைத்து கூறுகளின் செயல்பாடுகளும் சிறப்புற செயல்பட வேண்டும் என ஆசிரியர்களுக்கு அறிவுறுத்தப்பட்டது. குறிப்பாக 12 ஆம் வகுப்பு தேர்வு எழுதி இருக்கும் அனைத்து மாணவர்களையும் உயர்கல்வியின் சேர்ப்பதற்கான உயர்கல்வி வழிகாட்டி நிகழ்வுகளை தலைமையாசிரியர்கள் மற்றும் ஆசிரியர்களின் துணையுடன் சிறப்பாக செயல்படுத்திட வேண்டும் என கேட்டுக்கொள்ளப்பட்டது. 

12ம்வகுப்பு முடித்த எந்த ஒரு மாணவனும் உயர்கல்வி பெற வழி இல்லாது பின் தங்குகிற நிலைமை ஏழாத வண்ணம், ஒருங்கிணைந்த கல்வி பணியாளர்கள் அனைவரும் முழு முயற்சியுடன் செயல்பட்டு, சரியான திட்டமிடுதலுடன் அனைத்து குழந்தைகளையும் 100% உயர்கல்வி சேர்க்கைக்கு உட்படுத்தி அனைத்து மாணவர்கள் வாழ்விலும் ஒளியேற்ற வேண்டும் என கேட்டுக் கொண்டார். 

பள்ளி மாணவ மாணவியர்கள் ஆதார், சாதி சான்றிதழ் உட்பட அனைத்து சான்றிதழ்களும் வைத்துள்ளார்களா என்பதை அனைத்து தலைமையாசிரியர்கள், ஆசிரியர்கள் சரிபார்க்க வேண்டும் என ஆட்சியர் ஆர்.அழகுமீனா பேசினார். கூட்டத்தில் மாவட்ட கல்வி அலுவலர்கள், தலைமையாசிரிகள், ஆசிரியர்கள், மாவட்ட ஒருங்கிணைப்பாளர்கள் மற்றும் ஆசிரிய பயிற்றுநர்கள் உட்பட அனைவரும் கலந்து கொண்டார்கள்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads



New Shape Tailors

Arputham Hospital

CSC Computer Education








Thoothukudi Business Directory