» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

கொல்கத்தாவுக்கு ஏற்றிச் சென்றபோது கன்டெய்னரை உடைத்து 111 ஏ.சி. திருட்டு: 6 பேர் கைது

புதன் 2, ஏப்ரல் 2025 8:26:02 AM (IST)



கொல்கத்தாவுக்கு சென்ற கன்டெய்னரை உடைத்து அதில் இருந்த 111 ஏ.சி. எந்திரங்களை திருடிய 6 பேர் கைது செய்யப்பட்டனர்.

சென்னை மணலி விரைவு சாலை, எர்ணாவூர் பகுதியை சேர்ந்தவர் சபரி (35). இவர், சொந்தமாக டிரான்ஸ்போர்ட் வைத்து நடத்தி வருகிறார். கடந்த பிப்ரவரி மாதம் 9-ந் தேதி ஆந்திர மாநிலம் தடாவில் இருந்து 320 புதிய ஏ.சி. எந்திரங்களை இந்த நிறுவனத்துக்கு சொந்தமான 4 கன்டெய்னர் லாரிகளில் ஏற்றிக்கொண்டு சென்னை துறைமுகத்துக்கு வந்தது.

பின்னர் 320 ஏ.சி. எந்திரங்கள் இருந்த அந்த கன்டெய்னர்கள், சென்னை துறைமுகத்தில் இருந்து கொல்கத்தாவுக்கு கப்பலில் கொண்டு செல்லப்பட்டது. அங்கு ஊழியர்கள் கன்டெய்னரை திறந்து பார்த்தபோது 111 ஏ.சி. எந்திரங்கள் திருடுபோய் இருப்பதை அறிந்து அதிர்ச்சி அடைந்தனர்.

இது பற்றி அறிந்த சபரி, எண்ணூர் போலீசில் புகார் அளித்தார். இது தொடர்பாக உதவி போலீஸ் கமிஷனர் வீரக்குமார் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டு கன்டெய்னர் யார்டில் விசாரணை மேற்கொண்டனர்.

விசாரணையில் திருவொற்றியூர் சத்யமூர்த்தி நகரைச் சேர்ந்த ராஜேஷ் (41) மற்றும் அவரது கூட்டாளிகளான ஜானகிராமன் (45), திருவாரூர் மாவட்டத்தைச் சேர்ந்தவர்களான நெடுமாறன் (31), இளமாறன் (32), தண்டையார்பேட்டை பட்டேல் நகரை சேர்ந்த சரவணன் (34), தஞ்சாவூர் மாவட்டத்தைச் சேர்ந்த உதயநிதி (28) ஆகிய 6 பேரும் சேர்ந்து லாரி டிரைவரான குருமூர்த்தி உதவியுடன் கன்டெய்னரை உடைத்து 111 ஏ.சி. எந்திரங்களை திருடி, விற்பனை செய்தது தெரியவந்தது.

இதையடுத்து ராஜேஷ் உள்பட 6 பேரையும் கைது செய்த போலீசார், இவர்களிடம் இருந்து ஏ.சி. எந்திரங்கள் விற்பனை செய்ததில் கிடைத்த ரூ.18 லட்சத்து 75 ஆயிரம் மற்றும் விற்பனை செய்த 15 ஏ.சி. எந்திரங்கள் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர்.

ேமலும் இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து தலைமறைவாக உள்ள டிரைவர் குருமூர்த்தி உள்பட 2 பேரை தேடி வருகிறார்கள். கைதான ராஜேஷ், இதுபோல் ஏற்கனவே பல கன்டெய்னர்களை உடைத்து திருடியது தொடர்பாக 11 வழக்குகளும், நெடுமாறன் மீது பல குற்ற வழக்குகளும் உள்ளது குறிப்பிடத்தக்கது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads

Arputham Hospital






CSC Computer Education

New Shape Tailors




Thoothukudi Business Directory