» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்
மொழியை வைத்து பிளவு ஏற்படுத்த முயற்சி: யோகி ஆதித்யநாத்துக்கு முதல்வர் ஸ்டாலின் பதிலடி!
வியாழன் 27, மார்ச் 2025 10:41:42 AM (IST)
எந்த மொழிக்கும் நாங்கள் எதிரானவர்கள் அல்ல. மொழி திணிப்பையும் ஆதிக்கத்தையுமே நாங்கள் எதிர்க்கிறோம் என்று யோகி ஆதித்யநாத்துக்கு முதல்வர் மு.க. ஸ்டாலின் பதில் அளித்துள்ளார்.

இது தொடர்பாக மு.க ஸ்டாலின் கூறியிருப்பதாவது: எந்த மொழிக்கும் நாங்கள் எதிரானவர்கள் அல்ல. மொழி திணிப்பையும் ஆதிக்கத்தையுமே நாங்கள் எதிர்க்கிறோம். வாக்கு வங்கி அரசியலுக்காக பேசவில்லை; இது கண்ணியம் மற்றும் நீதிக்கான போராட்டம். வெறுப்பு குறித்து யோகி ஆதித்யநாத் எங்களுக்கு பாடம் எடுக்க வேண்டாம். இந்தி திணிப்பு மற்றும் பேரினவாதத்தை நாங்கள் எதிர்க்கிறோம்.
வாக்கு வங்கிக்கான கலவர அரசியல் இதுவல்ல. கண்ணியம் மற்றும் நீதிக்கான போராட்டம். தொகுதி மறுசீரமைப்பில் தமிழ்நாட்டின் குரல் நாடெங்கும் எதிரொலிப்பதால் பாஜக கலக்கம் அடைந்துள்ளது. பாஜகவினரின் பேட்டிகள் மூலம் இது தெரிகிறது" என்று பதிவிட்டுள்ளார்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

சத்துணவுத் திட்டத்தில் காலிப் பணியிடங்களுக்கு நேரடி நியமனம் : விண்ணப்பங்கள் வரவேற்பு
வியாழன் 10, ஏப்ரல் 2025 5:24:33 PM (IST)

பள்ளியில் மாணவியை தனியாக அமர வைத்த சம்பவம்: கல்வித்துறை அதிகாரிகள் விசாரணை!
வியாழன் 10, ஏப்ரல் 2025 3:51:34 PM (IST)

ம.சு. பல்கலைக்கழகத்தில் பேராசிரியைக்கு பாலியல் தொல்லை: பேராசிரியர் மீது புகார்
வியாழன் 10, ஏப்ரல் 2025 3:23:38 PM (IST)

தாட்கோ மூலமாக விவேஷியஸ் அகடாமியில் பயிற்சி: இளைஞர்களுக்கு ஆட்சியர் அழைப்பு
வியாழன் 10, ஏப்ரல் 2025 12:48:33 PM (IST)

வீரபாண்டி ஆறுமுகம் குடும்பத்தினரை விடுவித்த உத்தரவு ரத்து: உயர்நீதிமன்றம் உத்தரவு!
வியாழன் 10, ஏப்ரல் 2025 12:40:52 PM (IST)

பங்குனி உத்திர விழா எதிரொலி : குமரி மாவட்டத்தில் பூக்களின் விலை உயர்வு
வியாழன் 10, ஏப்ரல் 2025 12:31:16 PM (IST)
