» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்
அ.தி.மு.க. முன்னாள் எம்.எல்.ஏ. கருப்பசாமி பாண்டியன் மரணம்: எடப்பாடி பழனிசாமி இரங்கல்
புதன் 26, மார்ச் 2025 8:26:50 PM (IST)
நெல்லையில் அ.தி.மு.க. முன்னாள் எம்.எல்.ஏ. கருப்பசாமி பாண்டியன் உடல்நலக்குறைவால் இன்று காலமானார்.

தொடர்ந்து, முன்னாள் முதல்-அமைச்சர் ஜெயலலிதா அ.தி.மு.க. பொதுச் செயலாளராக பதவியேற்ற பின்னர் அக்கட்சியின் துணை பொதுச்செயலாளராக கருப்பசாமி பாண்டியன் அறிவிக்கப்பட்டு பதவி வகித்து வந்தார். ஜெயல லிதாவின் நன்மதிப்பபை பெற்ற அவர் நெல்லை மாவட்டத்தின் நெப்போலியன் என்றும், கானா என்றும் தொண்டர்களால் அழைக்கப்பட்டார்.
பல்வேறு காரணங்களுக்காக கடந்த 2000-ம் ஆண்டு கால கட்டத்தில் கருப்பசாமி பாண்டியன் அ.தி.மு.க.வில் இருந்து விலகி தி.மு.க.வில் இணைந்தார். தி.மு.க.விலும் முக்கிய நிர்வாகியாக வலம் வந்த அவர் கடந்த 2006-ம் ஆண்டு தென்காசி தொகுதியில் தி.மு.க. சார்பில் வேட்பாளராக அறிவிக்கப்பட்டாார். தொடர்ந்து அங்கு சட்டமன்ற உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டார்.
பின்னர் தி.மு.க.வில் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக அதில் இருந்து விலகி 2016-ம் ஆண்டு மீண்டும் அ.தி.மு.க.வில் இணைந்த கருப்பசாமி பாண்டியன் ஜெயலலிதா மறைவுக்கு பின்னர் சசிகலா தலைமையில் அ.தி.மு.க. இயங்க தொடங்கியபோது பல்வேறு கருத்து வேறுபாடுகள் ஏற்பட்டு மீண்டும் தி.மு.க.வில் இணைந்தார். பின்னர் கடந்த 2020-ம் ஆண்டு எடப்பாடி பழனிசாமி முன்னிலையில் மீண்டும் அ.தி.மு.க.வில் தன்னை இணைத்துக்கொண்டார்.
தற்போது அ.தி.மு.க.வின் அமைப்பு செயலாளராக இருந்து வரும் கருப்பசாமி பாண்டியன் வருகிற சட்டமன்ற தேர்தலை கருத்தில் கொண்டு மாவட்ட செயலாளர் தச்சை கணேசராஜாவின் தலைமையில் இயங்கும் நெல்லை மாநகர் மாவட்ட அ.தி.மு.க.வின் பொறுப்பாளராக நியமிக்கப்பட்டு பல்வேறு கூட்டங்களில் பங்கேற்று கட்சி நிர்வாகிகளுக்கும், தொண்டர்களுக்கும் தேர்தலை எதிர்கொள்ள பல்வேறு ஆலோசனைகளை வழங்கி வந்தார்.
சமீப காலமாகவே வயது முதிர்வின் காரணமாக உடல்நலக்குறைவு இருந்து வந்தாலும், கட்சி பணிகளை திறம்பட மேற்கொண்டு வந்தார். கடந்த 1 வாரமாக சற்று உடல்நிலை பாதிப்பு அதிகமாக இருந்த நிலையில் இன்று அதிகாலை 5 மணி அளவில் அவர் உயிர் பிரிந்தது. அவரது உடலுக்கு மாநகர் மாவட்ட செய லாளர் தச்சை கணசராஜா தலைமையில் கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள் அஞ்சலி செலுத்தி வரு கின்றனர. அவரது உடல் அடக்கம் நாளை (வியாழக்கிழமை) காலை 10 மணிக்கு திருத்து கிராமத்தில் நடை பெறுகிறது.
கருப்பசாமி பாண்டியன் மறைவிற்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின், அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ உள்பட பலர் இரங்கல் தெரிவித்து உள்ளனர்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

சத்துணவுத் திட்டத்தில் காலிப் பணியிடங்களுக்கு நேரடி நியமனம் : விண்ணப்பங்கள் வரவேற்பு
வியாழன் 10, ஏப்ரல் 2025 5:24:33 PM (IST)

பள்ளியில் மாணவியை தனியாக அமர வைத்த சம்பவம்: கல்வித்துறை அதிகாரிகள் விசாரணை!
வியாழன் 10, ஏப்ரல் 2025 3:51:34 PM (IST)

ம.சு. பல்கலைக்கழகத்தில் பேராசிரியைக்கு பாலியல் தொல்லை: பேராசிரியர் மீது புகார்
வியாழன் 10, ஏப்ரல் 2025 3:23:38 PM (IST)

தாட்கோ மூலமாக விவேஷியஸ் அகடாமியில் பயிற்சி: இளைஞர்களுக்கு ஆட்சியர் அழைப்பு
வியாழன் 10, ஏப்ரல் 2025 12:48:33 PM (IST)

வீரபாண்டி ஆறுமுகம் குடும்பத்தினரை விடுவித்த உத்தரவு ரத்து: உயர்நீதிமன்றம் உத்தரவு!
வியாழன் 10, ஏப்ரல் 2025 12:40:52 PM (IST)

பங்குனி உத்திர விழா எதிரொலி : குமரி மாவட்டத்தில் பூக்களின் விலை உயர்வு
வியாழன் 10, ஏப்ரல் 2025 12:31:16 PM (IST)
