» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

குமரி மாவட்டத்திற்கு ரூ.13.32 கோடி நிதி ஒதுக்கீடு : முதலமைச்சருக்கு விவசாயிகள் நன்றி!

செவ்வாய் 25, மார்ச் 2025 7:43:51 PM (IST)

கன்னியாகுமரி மாவட்டத்திற்குட்பட்ட கால்வாய்கள் அகலப்படுத்த மற்றும் சீரமைக்க சட்டசபையில் ரூ.13.32 கோடி நிதி ஒதுக்கீடு செய்த தமிழ்நாடு முதலமைச்சருக்கு பொதுமக்கள் மற்றும் விவசாயிகள் நன்றி தெரிவித்துள்ளனர்.

இது தொடர்பாக கன்னியாகுமரி மாவட்ட ஆட்சியர் ஆர்.அழகுமீனா வெளியிட்ட செய்திக்குறிப்பில் " தமிழ்நாடு முதலமைச்சர் நல்லாட்சியில் கடந்த 14.03.2025 (வெள்ளிக்கிழமை) அன்று 2025-2026ம் ஆண்டுக்கான நிதிநிலை அறிக்கையினை நிதி சுற்றுச்சூழல் மற்றும் காலநிலைமாற்றத்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு சட்டசபையில் தமிழ்நாடு முதலமைச்சர் தலைமையில் தாக்கல் செய்தார். 

நமது கன்னியாகுமரி மாவட்டத்திற்கு பல்வேறு திட்டங்களை அறிவித்தார்கள். குறிப்பாக திருவள்ளுவர் சிலை மற்றும் விவேகனாந்தர் பாறையினை இணைத்து கட்டப்பட்டுள்ள கண்ணாடி இழைப்பாலத்தை பார்வையிட சின்னமுட்டம் துறைமுகத்தை இரண்டாவது முனையமாக கொண்டு ரூ.2722 கோடி நிதி ஒதுக்கீடு செய்து, சின்ன முட்டத்திலிருந்து திருவள்ளுவர் சிலை வரை பயணிகள் படகுகள் இயக்கப்படுவதற்கான நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்று அறிவித்தார்கள்.

மேலும் நெல், தென்னை, வண்ண வண்ண பூக்கள், வாழை மரங்கள் பயிர் செய்திட நிதிஒதுக்கீடு செய்துள்ளார்கள். அதனைத்தொடர்ந்து கன்னியாகுமரி மாவட்ட பொதுமக்களின் நீண்ட நாள் கோரிக்கையினை நிறைவேற்றும் வகையில் தமிழ்நாடு முதலமைச்சர் கடந்த 24.03.2025 அன்று சட்டசபையில் கன்னியாகுமரி மாவட்டம் விளவங்கோடு வட்டத்திற்குட்பட்ட உண்ணாமலைக்கடை வழியாக செல்லும் பட்டணம்கால் பிரதானக்கால்வாயில் 288 மீட்டர் நீளத்திற்கு மூடுகால்வாய் அமைப்பதற்கு ரு.4.72 கோடி மதிப்பிலும், கல்குளம் வட்டம் திக்கணங்கோடு கால்வாயிலும் மூடுகால்வாய் அமைப்பதற்கு ரூ.2 கோடி மதிப்பீட்டிலும் நிதி ஒதுக்கீடு செய்துள்ளார்கள்.

மேலும் கல்குளம் வட்டத்திற்குட்பட்ட இரணியல் கிளைக்கால்வாய் மற்றும் அதன் பகிர்மான வாய்க்கால்களை புனரமைக்கும் பணிக்கு ரூ.6 கோடி மதிப்பிலும் தமிழ்நாடு முதலமைச்சர் நிதி ஒதுக்கீடு செய்துள்ளார்கள். தொடர்ந்து திருவட்டார் வட்டம் அருவிக்கரை மாத்தூர் தொட்டிபாலம் புனரமைக்கும் பணிக்கு ரூ.60 இலட்சம் நிதிஒதுக்கீடு செய்துள்ளார்கள். 

கன்னியாகுமரி மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களிடம் வைத்த கோரிக்கையினை உடனடியாக ஏற்று ரூ.13.32 கோடி மதிப்பில் நிதி ஒதுக்கீடு செய்த தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களுக்கும், தமிழ்நாடு தலைமை செயலாளர் அவர்களுக்கும், உதவி செயலாளர் உள்ளிட்ட அனைவருக்கும் கன்னியாகுமரி மாவட்ட நிர்வாகம், விவசாயிகள் சார்பிலும், பொதுமக்கள் சார்பிலும் நன்றியினை தெரிவித்துக் கொள்கிறேன் என மாவட்ட ஆட்சியர் ஆர்.அழகுமீனா தெரிவித்துள்ளார். 


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads


CSC Computer Education



Arputham Hospital


New Shape Tailors





Thoothukudi Business Directory