» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

கோவளத்தில் மகளிர் பல்வகை உணவுப்பொருட்கள் தயாரிப்பு நிலையம்: முதல்வர் திறந்து வைத்தார்

செவ்வாய் 25, மார்ச் 2025 4:41:51 PM (IST)



குமரி மாவட்டம் கோவளம் பகுதியில் மகளிர் பல்வகை உணவுப்பொருட்கள் தயாரிப்பு நிலையத்தினை தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் காணொலி காட்சி வாயிலாக திறந்து வைத்தார். 

தமிழ்நாடு முதலமைச்சர் சென்னை தலைமை செயலகத்திலிருந்து தமிழ்நாடு சிறுதொழில் வளர்ச்சி நிறுவனம் (சிட்கோ) திருநெல்வேலி வாயிலாக கன்னியாகுமரி மாவட்டம் கோவளம் பகுதியில் உள்ள பொது உபயோக மையத்தில் மகளிர் பல்வகை உணவுப்பொருட்கள் தயாரிப்பு நிலையத்தினை காணொலி காட்சி வாயிலாக இன்று (25.03.2025) திறந்து வைத்ததைத்தொடர்ந்து, மாவட்ட ஆட்சியர் ஆர்.அழகுமீனா, குத்துவிளக்கேற்றி தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களுக்கு நன்றி தெரிவித்து பேசுகையில்-

தமிழ்நாடு முதலமைச்சர் இன்று சென்னை தலைமை செயலகத்திலிருந்து தமிழ்நாடு சிறுதொழில் வளர்ச்சி நிறுவனம் (சிட்கோ) திருநெல்வேலி வாயிலாக கன்னியாகுமரி மாவட்டம் கோவளம் பகுதியில் உள்ள பொது உபயோக மையத்தில் மகளிர் பல்வகை உணவுப்பொருட்கள் தயாரிப்பு நிலையத்தினை துவக்கி வைத்து சிறப்பித்துள்ளார்கள். கன்னியாகுமரி மாவட்டத்தை பொறுத்தவரை சிட்கோ மூலமாக கோணம் மற்றும் மார்த்தாண்டம் பகுதிகளில் தொழிற்பேட்டை மையம் இயக்கி வருகிறது.

கோணம் தொழிற்பேட்டை 20.07 ஏக்கர் பரப்பளவில் 29 தொழில்மனைகளும் 18 தொழிற்கூடங்களும் உருவாக்கப்பட்டு அனைத்தும் தொழிற்முனைவோருக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன. இத்தொழிற்பேட்டையில் மீன்வலை தயாரிக்கும் தொழில் முக்கிய பங்கு வகிக்கிறது. மேலும் இங்கு மீன்வலை தயாரித்தல், ஸ்டீல் பேப்ரிகேசன், கையுறைகள் தயாரித்தல், பேப்ரிகேசன் ஓர்க் உள்ளிட்டவைகள் நடைபெற்று வருகிறது. 

மேலும் மார்த்தாண்டம் தொழிற்பேட்டை 7.50 ஏக்கர் பரப்பளவில் 8 தொழில்மனைகளும் 10 தொழிற்கூடங்களும் உருவாக்கப்பட்டு அனைத்தும் தொழிற்முனைவோருக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன. இத்தொழிற்பேட்டையில் முந்திரி சார்பான தொழில் முக்கிய பங்கு வகிக்கின்றது. மேலும் இங்கு மீன்வலை தயாரித்தல், முந்திரி பதப்படுத்துதல், அலுமினிய பாத்திரங்கள் உற்பத்தி, பேப்ரிகேசன் ஓர்க் போன்றவைகள் சிறப்பாக நடைபெற்று வருகிறது.

மேலும் இன்றைய தினம் தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களால் திறந்து வைக்கபட்ட பெண்கள் பலஉணவு தயாரிக்கும் கூடம் ரூ.6.5 கோடி மதிப்பு ஆகும்.இவற்றில் மாநில அரசின் பங்களிப்பு ரூ.5.98 கோடி சிறப்பு நோக்க ஊர்தி பங்களிப்பு மற்றும் வங்கிக்கடன் ரு.66.50 இலட்சம் மகளிர் உணவு பல்பொருள் குழுமத்திற்கு முதற்கட்டமாக கட்டுமான பணிகள் முடிக்கப்பட்டு, இயந்திரங்கள் கொள்முதல் செய்யப்பட்டுள்ளது. இக்குழுமத்தில் 29 சிறப்பு நோக்க ஊர்தியாளர்கள் உறுப்பினர்களாக உள்ளனர். இக்குழுமம் முற்றிலும் பெண்களால் செயல்படுத்தப்படவுள்ளது. 

இக்குழுமம் மூலம் நெல்லிக்காய், ஆரஞ்ச், தக்காளி, எலுமிச்சை, திராட்சை, மாம்பழம் ஆகியவற்றிலிருந்து பழச்சாறு மற்றும் தானிய வகை பிஸ்கட்களும் தயாரிக்கப்படுகிறது. குறிப்பாக முருங்கையை அடிப்படையாக கொண்டு பல உபபொருட்கள், தேன் நெல்லிக்காய், எலுமிச்சை ஊறுகாய், மாம்பழ ஊறுகாய், முந்திரி பிஸ்கெட், தினை கலவை, உலர் மீன், மீன் ஊறுகாய், இறால் ஊறுகாய், இறால் பொடி, மூலிகை பொடிகள், தேங்காய் எண்ணெய், கறிவேப்பிலை பொடி, லட்டுவகைள் உள்ளிட்ட பல்வேறு வகையான உணவுப்பொருட்கள் தயார் செய்வதற்காக 60 இயந்திரங்கள் அமைக்கப்பட்டுள்ளது. 

மேலும் இத்தயாரிப்பு பொருட்களை வெளிமாவட்டம், வெளிமாநிலம் மற்றும் வெளிநாடுகளுக்கு விரிவுப்படுத்தி, சந்தைப்படுத்தி வருமானம் ஈட்டுவதற்கான வழிவகைகள் குறித்து ஆராய்ந்து அதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும். இவ்வாறு ஆட்சியர் பேசினார்.

நிகழ்ச்சியில் சிட்கோ கண்காணிப்பாளர் மாரியம்மாள், ஸ்டெல்லாமேரி சமுதாய கல்வி மேம்பாட்டு இயக்குநர் அருட்சகோதரி லிஸ்டர் அர்ச்சனா, உதவி இயக்குநர் அருட்சகோதரி லிஸ்டர் ஜின்சி, இல்லத்தலைவி அருட்சகோதரி லிஸ்டர் லீமா, டி.எம் சபை தலைவி அருட்சகோதரி ரோஸ் பிரான்சிஸ், துணைத்தலைவி அருட்சகோதரி லிஸ்டர் சோபி தெரேஸ், மகளிர் சுயஉதவிக்குழுவினர், தொழிலாளர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்..


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads

Arputham Hospital







New Shape Tailors

CSC Computer Education



Thoothukudi Business Directory