» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்
கூட்டுறவு பொங்கல் மளிகைப் பொருட்கள் தொகுப்பு விற்பனை: தமிழக அரசு உத்தரவு
சனி 14, டிசம்பர் 2024 11:26:44 AM (IST)
பொங்கல் பண்டிகையை முன்னிட்டு கூட்டுறவு பொங்கல் என்ற பெயரில் மளிகைப் பொருட்கள் அடங்கிய தொகுப்பை விற்பனை செய்ய தமிழக அரசு உத்தரவிட்டு உள்ளது.
இதுகுறித்து அனைத்து மண்டல இணைப் பதிவாளர்களுக்கும் கூட்டுறவு சங்க பதிவாளர் அனுப்பிய சுற்றறிக்கையில் கூறப்பட்டு இருப்பதாவது: வரும் ஜனவரி 14-ந் தேதி பொங்கல் பண்டிகை கொண்டாடப்படுகிறது. இதை முன்னிட்டு கூட்டுறவு பொங்கல் என்ற பெயரில் மளிகைப் பொருட்கள் அடங்கிய தொகுப்பை கூட்டுறவு நிறுவனங்கள் மூலம் விற்பனை செய்ய உத்தரவிடப்பட்டு உள்ளது.
அந்த தொகுப்பை அந்தந்த மாவட்டங்களில் தயார் செய்து, அங்குள்ள கூட்டுறவு நிறுவனங்களான நுகர்வோர் கூட்டுறவு மொத்த விற்பனை பண்டகசாலைகள், பிரதம கூட்டுறவு பண்டகசாலைகள், கூட்டுறவு விற்பனை சங்கம், சுயசேவை பிரிவுகள், சில்லறை விற்பனை நிலையங்கள் ஆகிய விற்பனை அலகுகள் மூலம் விற்பனை செய்ய வேண்டும்.
ரூ.199-க்கு இனிப்பு பொங்கல் தொகுப்பு, ரூ.499-க்கு கூட்டுறவு சிறப்பு பொங்கல் தொகுப்பு, ரூ.999-க்கு பெரும் பொங்கல் தொகுப்பு என 3 தொகுப்புகளை விற்பனை செய்ய வேண்டும். இனிப்பு பொங்கல் தொகுப்பில் பச்சரிசி, பாகு வெல்லம் தலா அரை கிலோ மற்றும் ஏலக்காய், முந்திரி, ஆவின் நெய், பாசி பருப்பு, உலர் திராட்சை, சிறிய பை ஆகியவை இடம் பெற வேண்டும்.
கூட்டுறவு சிறப்பு பொங்கல் தொகுப்பில் கூட்டுறவு உப்பு ஒரு கிலோ, சர்க்கரை அரை கிலோ, செக்கு கடலை எண்ணெய் அரை லிட்டர் உள்பட 19 வகையான மளிகைப் பொருட்கள் இடம் பெற்றிருக்கும்.
பெரும் பொங்கல் தொகுப்பில் மளிகை பொருட்கள், வரகு, சாமை, தினை போன்ற சிறு தானியங்கள் உள்பட 34 வகையான பொருட்கள் இடம்பெற வேண்டும். பெரும் பொங்கல் தொகுப்பு வாங்கும்போது அரை கிலோ நாட்டுச் சர்க்கரையை இலவசமாக வழங்க வேண்டும். இந்த விற்பனைக்காக பொருட்களின் தொகுப்பை தயார் நிலையில் வைத்துக் கொள்ள வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.
முட்டாள்Dec 14, 2024 - 11:39:33 AM | Posted IP 162.1*****