» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

பல பெண்களை காதலித்து ஏமாற்றி பணம் பறித்த குமரியை சேர்ந்த காதல் மன்னன் கைது!

ஞாயிறு 8, டிசம்பர் 2024 10:25:00 AM (IST)

பல பெண்களை காதலித்து ஏமாற்றி பணம் பறித்த காதல் மன்னனனை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

கன்னியாகுமரி மாவட்டம் நெய்தமங்கலம் பகுதியைச் சேர்ந்தவர் லிஜின் (27). இவருக்கும், சென்னை புதுவண்ணாரப்பேட்டை பகுதியைச் சேர்ந்த 23 வயதான பெண் என்ஜினீயருக்கும் இருவீட்டு பெற்றோர், உறவினர்கள் முன்னிலையில் கடந்த 2-ந் தேதி சென்னை வண்ணாரப்பேட்டை எஸ்.பி.கோவில் தெருவில் உள்ள ஒரு தேவாலயத்தில் திருமணம் நடைபெற்றது.

முன்னதாக கடலூரை சேர்ந்த இளம்பெண், மணமகன் லிஜின் தன்னை காதலித்து திருமணம் செய்து ஒரு வருடம் குடும்பம் நடத்தி ஏமாற்றி விட்டதாகவும், தற்போது வேறு ஒரு பெண்ணை திருமணம் செய்ய இருப்பதாகவும், மணமகனை தன்னுடன் சேர்த்துக்வைக்க வேண்டும் எனவும் கூறி திருமணத்தை தடுத்து நிறுத்த முயன்றார்.

ஆனால் லிஜின், அவரை திருமணம் செய்து கொண்டதற்கான எந்தவித ஆவணங்களும் இளம்பெண்ணிடம் இல்லை. இதனால் அவர் பணம் பறிக்க நாடகமாடுவதாக கருதிய இருவரது பெற்றோர் மற்றும் உறவினர்கள் தண்டையார்பேட்டை போலீசில் புகார் அளித்தனர். அதன்பேரில் போலீசார் அந்த பெண்ணிடம் விசாரணை நடத்தி சமாதானம் செய்து அனுப்பிவைத்தனர். அதன்பிறகு பெண் என்ஜினீயருக்கும், லிஜினுக்கும் உறவினர்கள் முன்னிலையில் திருமணம் நடந்து முடிந்தது.

திருமணம் முடிந்த பிறகு பெண் வீட்டாருக்கும், உறவினர்களுக்கும் லிஜின் மீது சந்தேகம் ஏற்பட்டது. அவர்கள் ரகசியமாக லிஜின் குறித்து விசாரித்தனர். விசாரணையில் லிஜின் பல பெண்களை காதலித்து ஏமாற்றியதும், இது தொடர்பாக அவர் மீது போலீஸ் நிலையங்களில் புகார் இருப்பதும் தெரிந்து அதிர்ச்சி அடைந்தனர்.

மேலும் லிஜினின் செல்போனை, அவரது மனைவியான பெண் என்ஜினீயர் ஆய்வு செய்தார். அதில் லிஜினுக்கு இன்ஸ்டாகிராம், முகநூல் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் பல பெண்களுடன் தொடர்பு இருப்பதும், அந்த பெண்களுடன் அவர் பேசிய உரையாடல் இருந்ததையும் கேட்டு அதிர்ச்சி அடைந்தார்.

2019-ம் ஆண்டு காரைக்காலை சேர்ந்த பெண்ணை காதலித்து, ஆசை வார்த்தை கூறி 6 மாதம் கர்ப்பம் ஆக்கியுள்ளார். இதுபற்றி இளம்பெண் கொடுத்த புகாரின்பேரில் காரைக்கால் போலீசார் நடவடிக்கை மேற்கொண்டனர். அப்போது அந்த பெண்ணுக்கு ரூ.5 லட்சம் கொடுத்து சமாதானமாக போய் உள்ளார்.

அதேபோல் 2022-ம் ஆண்டு தென்காசியை சேர்ந்த பெண்ணை காதலித்து ஏமாற்றி உள்ளார். இந்தநிலையில்தான் 2023-ம் ஆண்டு கடலூரை சேர்ந்த இளம்பெண்ணை திருமணம் செய்து குடும்பம் நடத்தி ஏமாற்றியதும், இதனால் அவர் சென்னை வந்து திருமணத்தை தடுத்து நிறுத்த முயன்றதும் தெரிந்தது. லிஜினின் பெற்றோரை தொடர்பு கொண்டபோது அவர்களது செல்போன் ‘சுவிட்ச் ஆப்’ செய்யப்பட்டு இருப்பது தெரியவந்தது.

இதையடுத்து தங்களை நம்ப வைத்து ஏமாற்றி மகளை திருமணம் செய்து கொண்டதாக பெண் என்ஜினீயரின் பெற்றோர், வண்ணாரப்பேட்டை அனைத்து மகளிர் போலீசில் புகார் அளித்தனர். அதன்பேரில் இன்ஸ்பெக்டர் சஜிபா வழக்குப்பதிவு செய்து பல பெண்களை காதலித்து ஏமாற்றி பணம் பறித்த காதல் மன்னன் லிஜினை கைது செய்து சிறையில் அடைத்தனர். மேலும் இந்த வழக்கில் சம்பந்தப்பட்ட லிஜின் தாய்-தந்தை மற்றும் உறவினர்கள் குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.


மக்கள் கருத்து

அதுDec 8, 2024 - 06:52:45 PM | Posted IP 162.1*****

காம மன்னன்

மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads

New Shape Tailors



Arputham Hospital





Thoothukudi Business Directory