» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

உண்மை தகவல்களை மறைத்து பொதுநல வழக்கு தொடர்ந்தவருக்கு ரூ.20 லட்சம் அபராதம்!

வியாழன் 5, டிசம்பர் 2024 5:44:38 PM (IST)

உண்மை தகவல்களை மறைத்து பொது நல வழக்கை தாக்கல் செய்தவருக்கு 20 லட்சம் ரூபாய் அபராதம் விதித்து சென்னை உயர் நீதிமன்றம், உத்தரவிட்டுள்ளது.

திருவள்ளுர் மாவட்டம், திருமுல்லைவாயில் பகுதியில் 40.95 ஏக்கர் பாதுகாக்கப்பட்ட வனப்பகுதி நிலத்தை, தனியார் நிலமாக வகை மாற்றம் செய்து 2007 ம் ஆண்டு பிறப்பிக்கப்பட்ட அரசாணையை எதிர்த்து திருமுல்லைவாயிலைச் சேர்ந்த ராஜ்மோகன் என்பவர் வழக்கு தொடர்ந்திருந்தார். 

அந்த மனுவில், முன்னாள் எம் எல் ஏ ஞானசேகரன், தன் அதிகாரத்தை தவறாக பயன்படுத்தி, பாதுகாக்கப்பட்ட வனப்பகுதி நிலத்தை, தனியார் நிறுவனத்துக்கு ஒதுக்கீடு செய்து பல கோடி ரூபாய் இழப்பு ஏற்படுத்தி இருப்பதாகவும், நிலத்தை அளவீடு செய்து அது வனப்பகுதி நிலம் என அறிவிப்புப் பலகை வைக்க உத்தரவிடவேண்டும் எனவும் மனுவில் கோரப்பட்டிருந்தது.

இந்த வழக்கை விசாரித்த தலைமை நீதிபதி ஸ்ரீராம் மற்றும் நீதிபதி செந்தில்குமார் ராமமூர்த்தி ஆகியோர், 2007 ம் ஆண்டு பிறப்பிக்கப்பட்ட அரசாணையை எதிர்த்து 17 ஆண்டுகளுக்குப் பின் இந்த வழக்கை தாக்கல் செய்ததற்கு உரிய காரணங்கள் விளக்கப்படவில்லை. மனுதாரரின் வயது, வருமானம் குறித்த தகவல்கள் முன்னுக்குப் பின் முரணாக தெரிவிக்கப்பட்டுள்ளது. நிலம் வகை மாற்றம் குறித்த உண்மைகளை மறைத்து இந்த வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. எனவே, இந்த வழக்கு 20 லட்சம் ரூபாய் அபராதத்துடன் தள்ளுபடி செய்யப்படுகிறது..

அபராதத் தொகை 20லட்சம் ரூபாயில், இந்த வழக்கால் பாதிக்கப்பட்ட கட்டுமான நிறுவனத்துக்கு 10 லட்சம் ரூபாயும், தமிழ்நாடு சட்டப் பணிகள் ஆணைக் குழுவுக்கு 10 லட்சம் ரூபாயும் நான்கு வாரங்களில் செலுத்த வேண்டும். மனுதாரர் ஓராண்டுக்கு நீதிமன்றத்தின் அனுமதியின்றி பொது நல வழக்கும் தாக்கல் செய்ய தடை விதிக்கப்படுகிறது என்று உத்தரவிட்டனர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads




Arputham Hospital

New Shape Tailors




Thoothukudi Business Directory