» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்
ஜனநாயக உரிமையை முடக்க நினைக்கும் திமுக அரசு : அண்ணாமலை குற்றச்சாட்டு
புதன் 4, டிசம்பர் 2024 5:31:56 PM (IST)
வங்கதேச அரசைக் கண்டித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட பாஜகவினர் கைது செய்யப்பட்டதற்கு பாஜக தலைவர் அண்ணாமலை கண்டனம் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்ட அறிக்கையில், "வங்கதேச நாட்டில், இந்து மத மக்கள் மீது தாக்குதல் நடத்துபவர்களுக்கு ஆதரவாகச் செயல்படும் வங்காளதேச அரசைக் கண்டித்து, தமிழக பாஜக சார்பாக தமிழகம் முழுவதும் இன்று மாநிலம் தழுவிய ஆர்ப்பாட்டம் நடைபெற்று வருகிறது.அமைதியான முறையில் நடைபெறும் இந்த ஆர்ப்பாட்டங்களுக்கு, அனைத்து மாநில அரசுகளும் அனுமதி வழங்கியுள்ள நிலையில், திமுக அரசு மட்டும் அனுமதி வழங்க மறுத்ததோடு, ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட பல ஆயிரம் பொதுமக்களையும், பாஜக மூத்த தலைவர்களையும், தொண்டர்களையும் கைது செய்திருக்கிறது.
வங்கதேசத்தில் பாதிக்கப்பட்டுள்ள இந்து மக்களுக்காகக் குரல் கொடுப்பது, ஜனநாயக உரிமை. இதனை முடக்க நினைக்கும் திமுகவின் போக்கு, மோசமான முன்னுதாரணத்தை ஏற்படுத்தியிருக்கிறது. திமுக அரசின் இந்த எதேச்சதிகாரப் போக்கினை வன்மையாகக் கண்டிக்கிறோம். துயரில் வாடும் வங்காளதேச இந்துக்களுக்காக பாஜக தொடர்ந்து ஓங்கி குரல் கொடுக்கும் என்பதை தெரிவித்துக் கொள்கிறோம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

அனைத்து வாக்குச்சாவடிகளிலும் நாளை புதிய வாக்காளர் பெயர் சேர்க்கும் முகாம்!
சனி 13, டிசம்பர் 2025 5:55:15 PM (IST)

தமிழகத்தில் 2 நாட்களுக்கு குளிர் அதிகரிக்கும் : வானிலை ஆய்வு மையம் தகவல்
சனி 13, டிசம்பர் 2025 5:50:12 PM (IST)

திருப்பரங்குன்றம் பிரச்சினைக்கு பாஜக, திமுக அரசுதான் காரணம் : சீமான் குற்றச்சாட்டு!
சனி 13, டிசம்பர் 2025 4:04:43 PM (IST)

பெருமாநிலங்களை பின்னுக்குத் தள்ளி தமிழ்நாடு சாதனை : முதல்வர் ஸ்டாலின் பெருமிதம்
சனி 13, டிசம்பர் 2025 12:53:04 PM (IST)

பள்ளி வகுப்பறையில் மது அருந்திய விவகாரம்: நெல்லையில் 6 மாணவிகள் சஸ்பெண்ட்...!
சனி 13, டிசம்பர் 2025 12:09:48 PM (IST)

அரசு ரப்பர் கழகத்தோட்டத்தை வனத்துறையிடம் ஒப்படைக்க கூடாது: சீமான் வலியுறுத்தல்!
சனி 13, டிசம்பர் 2025 11:58:37 AM (IST)










