» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

தமிழ்நாட்டில் 21 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம் தகவல்

வியாழன் 14, நவம்பர் 2024 8:30:40 AM (IST)

வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக தமிழ்நாட்டில் 21 மாவட்டங்களில் இன்று (வியாழக்கிழமை) கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.

வங்கக்கடலில் கடந்த 2 தினங்களுக்கு முன்பு காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவானது. இது தமிழகப் பகுதிகளை நோக்கி நகர்ந்தது. இதனால் சில இடங்களில் கனமழையும், பல இடங்களில் மிதமான மழையும் பெய்தது. இந்த காற்றழுத்த தாழ்வுப்பகுதி நேற்று வலுவிழந்து, வட தமிழக கடலோரப் பகுதிகளை ஒட்டிய தென் மேற்கு வங்கக்கடல் பகுதிகளின் மேல் வளிமண்டல கீழடுக்கு சுழற்சியாக நிலவுகிறது.

இதேபோல் கேரள கடலோரப் பகுதிகளை ஒட்டிய தென்கிழக்கு அரபிக்கடல் பகுதிகளின் மேல் மற்றொரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவி வருகிறது. இதனால் தமிழ்நாட்டில் இன்று முதல் 3 நாட்களுக்கு மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் அறிவித்து இருக்கிறது.

அதன்படி, இன்றும், நாளையும் (வெள்ளிக்கிழமை) தமிழ்நாட்டில் அனேக இடங்களிலும், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி மின்னலுடன் மிதமான மழை பெய்யக்கூடும்.

அதிலும், இன்று செங்கல்பட்டு, காஞ்சீபுரம், கள்ளக்குறிச்சி, திருவண்ணாமலை, விழுப்புரம், கடலூர், மயிலாடுதுறை, நாகப்பட்டினம், தஞ்சாவூர், திருவாரூர், அரியலூர், பெரம்பலூர், புதுக்கோட்டை, சிவகங்கை, மதுரை, விருதுநகர், தென்காசி, ராமநாதபுரம், தூத்துக்குடி, திருநெல்வேலி, கன்னியாகுமரி ஆகிய 21 மாவட்டங்கள், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களிலும், நாளை தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, புதுக்கோட்டை, திண்டுக்கல், தேனி, மதுரை, விருதுநகர், தென்காசி, தூத்துக்குடி, திருநெல்வேலி, கன்னியாகுமரி, ராமநாதபுரம், சிவகங்கை, நீலகிரி, கோவை, திருப்பூர் மாவட்டங்கள் மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களிலும் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது.

நாளை மறுநாள் (சனிக்கிழமை) தமிழ்நாட்டில் சில இடங்களிலும், புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளிலும் இடி மின்னலுடன் மிதமான மழையும், நீலகிரி, கோவை, திருப்பூர், தேனி, திண்டுக்கல் மாவட்டங்களில் உள்ள ஓரிரு இடங்களில் கனமழையும் பெய்யக்கூடும்.

நேற்று காலை 8.30 மணியுடன் முடிவடைந்த 24 மணி நேரத்தில் தமிழ்நாட்டில், சீர்காழி, கொள்ளிடம் தலா 14 செ.மீ., மணல்மேடு 11 செ.மீ., ஜெயங்கொண்டம் 8 செ.மீ., லால்பேட்டை, பத்துகண்ணு, பாகூர், மணல்மேடு, செந்துறை, கும்மிடிப்பூண்டி தலா 7 செ.மீ. தரங்கம்பாடி, கீழ் அணைக்கட்டு, செந்துரை, அண்ணாமலை நகர், தாமரைப்பாக்கம், சிதம்பரம், கடலூர் மாவட்ட கலெக்டர் அலுவலகம், காட்டுமன்னார்கோவில் தலா 6 செ.மீ. உள்பட சில இடங்களில் மழை பெய்துள்ளது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads


Arputham Hospital


New Shape Tailors





Thoothukudi Business Directory