» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்
பாராளுமன்ற நிதி மூலம் புதிய திட்டப்பணிகள் : விஜய் வசந்த் எம்.பி அடிக்கல் நாட்டினார்!
செவ்வாய் 15, அக்டோபர் 2024 11:28:59 AM (IST)
நாகர்கோவில் மாநகராட்சி பகுதிகளில் பாராளுமன்ற உறுப்பினர் நிதியில் இருந்து பல்வேறு புதிய திட்டப்பணிகளை விஜய்வசந்த் எம்பி அடிக்கல் நாட்டி துவக்கி வைத்தார்.
கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் மாநகராட்சிக்கு உட்பட்ட 44-வது வார்டு சென்ன வண்ணான் விளையில் ரூ. 13 லட்சம் மதிப்பில் புதிதாக அங்கன்வாடி கட்டிடம் , பட்டகசாலியன் விளையில் ரூ. 3 லட்சம் மதிப்பில் புதிதாக ஆழ்துளை குடிநீர் கிணறு மற்றும் மின் மோட்டார் அமைப்பதற்கும் அடிக்கல் நாட்டினார்.
அடுத்து வார்டு எண் 33 க்கு உட்பட்ட குருசடி ஊருக்கு ரூபாய் 4 லட்சம் மதிப்பில் பயணிகள் நிழற்குடை அமைக்கவும் அடிக்கல் நாட்டினார். அடுத்து வார்டு எண் 32 வடக்கு கோணத்தில் ரூபாய் 10 லட்சம் நிதி ஒதுக்கி ஆற்றுப் பாலம் அமைக்க அடிக்கல் நாட்டினார் அதனை தொடர்ந்து 37-வது வார்டு வடலிவிளை அரசு உயர்நிலைப்பள்ளிக்கு ரூ. 18 லட்சம் மதிப்பில் கட்டப்பட்ட புதிய கட்டித்தை கன்னியாகுமரி பாராளுமன்ற உறுப்பினர் விஜய் வசந்த் திறந்து வைத்தார்.
இந்நிகழ்ச்சியில் குமரி கிழக்கு மாவட்ட திமுக செயலாளரும் மேயருமான ரெ. மகேஷ், துணை மேயர் மேரி பிரின்ஸி லதா, மாவட்ட காங்கிரஸ் தலைவர் நாகர்கோயில் மாநகரம், மற்றும் மாநகராட்சி 44 - வது வார்டு மாமன்ற உறுப்பினர் வழக்கறிஞர் ஜெ.எஸ். நவீன்குமார், மண்டல தலைவர் ஜவஹர், தலைமைச் செயற்குழு உறுப்பினர் சதாசிவன், மற்றும் காங்கிரஸ் கட்சி நிர்வாகிகள், பொதுமக்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.