» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

மத்திய அரசுக்கு மக்கள் உரிய நேரத்தில் தகுந்த பதிலடி தருவார்கள் : முதல்வர் மு.க.ஸ்டாலின்

சனி 21, டிசம்பர் 2024 5:21:11 PM (IST)

தமிழ்நாட்டின் உரிமைகளை தரவில்லை என்றால் மத்திய அரசுக்கு மக்கள் உரிய நேரத்தில் தகுந்த பதிலடி தருவார்கள் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

நடந்து முடிந்த நாடாளுமன்ற குளிர்காலக் கூட்டத்தொடரில் திமுக மக்களவை, மாநிலங்களவை எம்.பி.க்களின் செயல்பாடுகளைப் பாராட்டியும், கூட்டத்தொடர் முழுவதும் பாஜக அவையை முடக்கியதாகவும் குறிப்பிட்டு முதல்வர் ஸ்டாலின் நீண்ட அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.

அதில், தமிழ்நாட்டின் உரிமைகளைத் தரவில்லையென்றால் மத்திய அரசுக்கு தமிழ்நாட்டு மக்கள் உரிய நேரத்தில் மீண்டும் தகுந்த பதிலடியை கொடுப்பார்கள் என்பது உறுதி எனக் குறிப்பிட்டுள்ளார். நாடாளுமன்றத்தில் ஆக்கப்பூர்வ விவாதம் நடப்பது பாஜக ஆட்சியில் அரிதாகிவிட்டது.

அவையில் பாஜகவினரால் ஜனநாயகம் படாத பாடுபட்டபோது பிரதமர் மோடி வேடிக்கை பார்த்தார். பதில் சொல்லியே ஆக வேண்டிய அணைத்திலும் மோடி கனத்த மௌனம் காத்தார். அரசின் தோல்வி விவாதமாகக் கூடாது என்ற நோக்கத்தில் பாஜக உறுப்பினர்கள் செயல்பட்டனர். தமிழகத்தை ஓரவஞ்சனையுடன் நடத்த முடியாது என திமுக நாடாளுமன்ற உறுப்பினர்கள் முழங்கினர். அவர்களின் செயல்பாடுகளைப் பார்த்து நாடே வியந்து கொண்டிருக்கிறது. 

தமிழ்நாட்டின் நலனுக்காக குரல் கொடுப்பது - மாநில உரிமைகள் தொடர்பான பிரச்னைகளை எழுப்பி அவையின் கவனத்தை ஈர்ப்பது ஆகிய இரண்டையும் வெற்றிகரமாகச் செய்து காட்டி இருக்கிறார்கள். மற்ற மாநில உறுப்பினர்களுக்கு முன்னோடிகளாக திமுக உறுப்பினர்கள் செயல்படுவதைப் பார்த்து - திமுக தலைவராக நான் எண்ணி எண்ணி மகிழ்கிறேன் என்றும் கூறியுள்ளார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads

Arputham Hospital


New Shape Tailors






Thoothukudi Business Directory