» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

தமிழ்நாடு மெர்க்கன்டைல் வங்கியில் கிழிந்த ரூபாய் நோட்டுக்களை மாற்றும் முகாம்!

செவ்வாய் 15, அக்டோபர் 2024 10:11:26 AM (IST)

தமிழ்நாடு மெர்க்கன்டைல் வங்கியின் மார்த்தாண்டம் கிளையில் அக்.17ம் தேதி நாணய திருவிழா மற்றும் கிழிந்த ரூபாய் நோட்டுக்களை மாற்றும் முகாம் நடைபெற உள்ளது. 

தூத்துக்குடியை தலைமையிடமாகக் கொண்டு இயங்கி வரும் தமிழ்நாடு மெர்க்கன்டைல் வங்கி மற்றும் பாரத ரிசர்வ் வங்கியின் சார்பில் அக்.17ம் தேதி வியாழக்கிழமை காலை 10 மணி முதல் மாலை 4 மணி வரை நாணய திருவிழா மற்றும் கிழிந்த, அழுக்கடைந்த ரூபாய் நோட்டுக்களை மாற்றும் முகாம் தமிழ்நாடு மெர்க்கன்டைல் வங்கியின் மார்த்தாண்டம் கிளையில் நடைபெற உள்ளது. 

இந்த முகாமில், வாடிக்கையாளர்கள், பொதுமக்கள் கலந்து கொண்டு பழைய, கிழிந்த ரூபாய் நோட்டுக்களை கொடுத்து புதிய ரூபாய் நோட்டுக்களை பெற்று பயன்பெறுமாறு வங்கி நிர்வாகம் அறிவித்துள்ளது. இதற்கான ஏற்பாடுகளை மார்த்தாண்டம் கிளை அதிகாரிகள் செய்துள்ளனர். 


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads


New Shape Tailors


Arputham Hospital





Thoothukudi Business Directory