» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

சென்னை மேம்பாலத்தில் நிறுத்திய கார்களை அபராதம் விதித்து அப்புறப்படுத்திய போலீசார்

செவ்வாய் 15, அக்டோபர் 2024 8:38:07 AM (IST)



சென்னையில் கனமழை எதிரொலியாக வாகன ஓட்டிகள் மேம்பாலத்தில் நிறுத்திவைத்த கார்களுக்கு போலீசார் அபராதம் விதித்து அப்புறப்படுத்தினர்.

வடகிழக்கு பருவமழையையொட்டி சென்னைக்கு ‘சிவப்பு எச்சரிக்கை’ விடப்பட்டுள்ளது. அதிகனமழை பெய்யும் என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டு உள்ளதால் சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சீபுரம் ஆகிய 4 மாவட்ட பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று (செவ்வாய்க்கிழமை) விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கிடையே, தாழ்வான பகுதியில் வசிப்பவர்கள் தங்களது கார்களை பாதுகாப்பான இடங்களுக்கு கொண்டு சென்றதை நேற்று பார்க்க முடிந்தது. வேளச்சேரி, கொடுங்கையூர், மாதவரம், கோயம்பேடு உள்பட பல்வேறு பகுதிகளில் சாலையோரத்தில் ஏராளமான வாகனங்கள் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது.

கடந்த காலங்களில் பெய்த பெருமழையால் ஏராளமான வாகனங்கள் நீரில் மூழ்கி பெரிய அளவில் சேதம் அடைந்தன. எனவே மீண்டும் அதுபோன்ற நிலை வந்து விடக்கூடாது என்பதற்காக சென்னை நகரில் பல்வேறு இடங்களில் வாகனங்கள் மேடான பகுதியில் நேற்று மாலை முதல் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது.

மேம்பாலத்திலும் பொதுமக்கள் வாகனங்களை நிறுத்தி சென்றதால் வாகன நெரிசல், பாதுகாப்பு கருதி போக்குவரத்து போலீசார் அந்த கார்களை அப்புறப்படுத்தினர். வாகனங்களை நிறுத்த வந்த பொது மக்களிடமும் வேறு இடத்தில் நிறுத்துங்கள், மேம்பாலங்களில் போக்குவரத்துக்கு இடையூறு விளைவிக்கும் வகையில் நிறுத்தினால் அபராதம் விதிக்கப்படும் என்றும் எச்சரித்தனர்.

இதனால் சில இடங்களில் போக்குவரத்து போலீசாருக்கும், பொது மக்களுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. வேளச்சேரி, சைதாப்பேட்டை, பெரம்பூர் உள்ளிட்ட பகுதியில் போக்குவரத்துக்கு இடையூறாக நின்றிருந்த வாகனங்களுக்கு போலீசார் அபராதம் விதித்தனர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads



Arputham Hospital

New Shape Tailors





Thoothukudi Business Directory