» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

நாட்டுக் கோழிக்குஞ்சுகள் வழங்கும் திட்டம் : ஏழை பெண்கள் விண்ணப்பிக்கலாம்!

வெள்ளி 11, அக்டோபர் 2024 12:36:45 PM (IST)

குமரி மாவட்டத்தில்,40 நாட்டுக் கோழிக்குஞ்சுகள் 50% மானியத்தில் பெற ஆதரவற்ற பெண்கள் விண்ணப்பிக்கலாம் என்று மாவட்ட ஆட்சியர் அழகுமீனா தெரிவித்துள்ளார். 

கிராமப்புறங்களில் உள்ள ஏழை பெண்கள் விதவைகள் கணவனால் கைவிடப்பட்டோர் மற்றும் ஆதரவற்ற பெண்களுக்கு நான்கு வாரங்கள் உடைய 40 நாட்டுக் கோழிக்குஞ்சுகள் 50% மானியத்தில் வழங்கும் திட்டம் கன்னியாகுமரி மாவட்டத்தில் 900 அலகுகள் செயல்படுத்தப்படவுள்ளது. இத்திட்டத்தில் ஒரு பயனாளிக்கு நான்கு வாரமுடைய  40 நாட்டுக்கோழிக்குஞ்சுகள் 50% மானியத்தில் ரூ.1600/- செலவில் வழங்கப்படவுள்ளது. 

தேர்வு செய்யப்பட்ட பயனாளிகளுக்கு கோழி வளர்ப்பு குறித்து ஒரு நாள் பயிற்சி அளிக்கப்படும். இத்திட்டத்தில் பயனாளியாக தேர்வு செய்திட பயனாளி ஊரக பகுதியில் உள்ளவராகவும் அந்தந்த கிராமங்களில் நிரந்தரமாக வசிப்பவராகவும் கோழி வளர்ப்பில் ஆர்வமுடையராக இருத்தல் வேண்டும். 30% பயனாளிகள் தாழ்த்தப்பட்ட/ பழங்குடியினர் இனத்தைச் சேர்ந்தவர்களாக இருத்தல் வேண்டும். ஏற்கனவே அரசால் வழங்கப்பட்ட இலவச ஆடு/மாடு/கோழிகள் திட்டத்தில் பயனடைந்தவராக இருத்தல் கூடாது.

மேற்கண்ட தகுதிவாய்ந்த விருப்பமுள்ள பயனாளிகள் ஆதார் அட்டை நகலுடன், அருகிலுள்ள கால்நடை மருந்தக, கால்நடை உதவி மருத்துவரிடம் விண்ணப்பம் அளித்திடவும் ஏற்கனவே கடந்த மாதம் நடைபெற்ற மக்களுடன் முதல்வர் முகாமில் 50% மானியத்தில் கோழிகள் கோரி விருப்பம் விண்ணப்பம் அளித்த பயனாளிகள் விண்ணப்பிக்க வேண்டாம் எனவும் மாவட்ட ஆட்சித் தலைவர் ஆர்.அழகுமீனா கேட்டுக்கொள்கிறார்.


மக்கள் கருத்து

m.malkiyaOct 11, 2024 - 05:27:54 PM | Posted IP 172.7*****

Small house

a.priya dharshiniOct 11, 2024 - 05:26:57 PM | Posted IP 162.1*****

Small house

மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads



New Shape Tailors



Arputham Hospital



Thoothukudi Business Directory