» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

குழந்தைகள் பாதுகாப்பு அலகில் பணியிடங்கள்: அக்.25க்குள் விண்ணப்பங்கள் வரவேற்பு!

செவ்வாய் 8, அக்டோபர் 2024 11:11:03 AM (IST)

குமரி மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகில் தற்காலிக பணியிடங்களுக்கு  விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. 

கன்னியாகுமரி மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகிற்கு பாதுகாப்பு அலுவலர் (நிறுவனம் சாரா) மற்றும் புறத்தொடர்பு பணியாளர் (Outreach Worker) பணியிடம் தற்காலிக ஒப்பந்த தொகுப்பூதிய அடிப்படையில் நிரப்பப்பட உள்ளதால் தகுதியான நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் 25.10.2024 வரை வரவேற்கப்படுகின்றன.

புறத்தொடர்பு பணியாளர் (Outreach Worker) - 1

மாத தொகுப்பூதியம் 10,592/

கல்வித் தகுதி: அங்கீகரிக்கப்பட்ட வாரியத்திலிருந்தும்/அதற்கு சமமான வாரியத்திலிருந்து 12-ம் வகுப்பு தேர்ச்சி, சிறந்த தொடர்பு கொள்ளும் திறன், வேலை அனுபவம் உள்ளவர்களுக்கு முன்னுரிமை வழங்கப்படும். 01.10.2024 அன்று 40 வயதிற்கு உட்பட்டவராக இருத்தல் வேண்டும்.

பாதுகாப்பு அலுவலர் (நிறுவனம் சாரா) (Protection Officer -NIC) - 1

மாத தொகுப்பூதியம் 27,804/-

சமூகப்பணி / சமூகவியல் / குழந்தைகள் வளர்ச்சி / மனித உரிமைகள் பொது நிர்வாகம் / உளவியல் / மனநலம் / சட்டம் / பொது சுகாதாரம் /சமுதாய வள மேலாண்மை இவற்றில் அங்கீகரிக்கப்பட்ட பல்கலைகழகத்தின் மூலம் வழங்கப்பட்ட முதுகலைப்பட்டம் அல்லது

சமூகப்பணி / சமூகவியல் / குழந்தைகள் வளர்ச்சி / மனித உரிமைகள் / பொது நிர்வாகம் இளநிலை பட்டம் மற்றும் பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாடு உளவியல்/ மனநலம் / சட்டம் / பொது சுகாதாரம்/ சமுதாய வள மேலாண்மை ஆகியவற்றில் அங்கீகரிக்கப்பட்ட பல்கலைகழகத்தின் மூலம் வழங்கப்பட்ட இளங்கலைப்பட்டம் மற்றும்

திட்டம் உருவாக்குதல் மற்றும் செயலாக்கம், அனுபவம், கண்காணிப்பு மற்றும் மேற்பார்வையில் 2 ஆண்டுகள் அனுபவம் சமூக நலன் மற்றும் பெண்கள் மற்றும் வளர்ச்சி துறையில் அனுபவம் உள்ளவர்களுக்கு முன்னுரிமை. மேலும் கணிணி அறிவு உடையவராகவும் இருத்தல் வேண்டும். 01.10.2024 அன்று 40 வயதிற்கு உட்பட்டவராக இருத்தல் வேண்டும்.

மாதிரி விண்ணப்ப படிவம் கன்னியாகுமரி மாவட்ட நிர்வாக வலைதளத்தில் (www.kanniyakumari.nic.in) பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். மேற்கண்ட பதவிக்கு தகுதியுள்ள நபர்களிடமிருந்து புகைப்படத்துடன் (Pass Port Size) கூடிய விண்ணப்பம் 25.10.2024 அன்று மாலை 5.30 ற்குள் கீழ்கண்ட முகவரியில் வந்து சேரும் வகையில் அனுப்புமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது. 

முழுமையாக பூர்த்தி செய்யபடாத விண்ணப்பம் மற்றும் குறிப்பிட்ட காலகெடுக்குள் வந்து சேராத விண்ணப்பங்கள் நிராகரிக்கப்படும். 

விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய முகவரி:  

மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர், 
மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகு, 
3-வது தளம், இணைப்பு கட்டிடம், 
மாவட்ட ஆட்சியர் அலுவலம், 
 நாகர்கோவில் -629001.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads


Arputham Hospital



New Shape Tailors




Thoothukudi Business Directory