» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

ஆவின் ஐஸ்கிரீம் விலை உயர்வு : பால் முகவர்கள் நலச்சங்கம் கண்டனம்!

செவ்வாய் 8, அக்டோபர் 2024 10:58:29 AM (IST)

ஆவின் ஐஸ்கிரீம் விலை உயர்வுக்கு பால் முகவர்கள் தொழிலாளர்கள் நலச்சங்கம் கண்டனம் தெரிவித்துள்ளது. 

தமிழ்நாடு பால் முகவர்கள் தொழிலாளர்கள் நலச்சங்கத்தின் நிறுவனத் தலைவர் பொன்னுசாமி வெளியிட்டுள்ள அறிக்கை: தமிழ்நாடு அரசின் ஆவின் நிர்வாகம் நடப்பாண்டின் மார்ச் மாதம் 65 மி.லி. சாக்கோபாருக்கு ரூ.2-ம், 100 மி.லி. கிளாசிக் கோன், 125 மி.லி. வெண்ணிலா பால் ஐஸ்கிரீம் வகைகளுக்கு ரூ.5-ம் என சிறிதளவு விற்பனை விலையை உயர்த்திய ஆவின் நிர்வாகம் 

தற்போது 65 மி.லி. சாக்கோபார் (ரூ.5) தொடங்கி 1000 மி.லி. வெண்ணிலா (ரூ.70) உள்ளிட்ட ஒவ்வொரு வகையான ஐஸ்கிரீம்களுக்கும் அதற்கேற்ற வகையில் விற்பனை விலையை உயர்த்துவது தொடர்பாக முடிவெடுத்தது. 

இதனை கடந்த 1-ந்தேதி முதல் ஆவின் நிர்வாகம் சத்தமின்றி அமல்படுத்தியுள்ளதோடு திருமணம், பிறந்த நாள் உள்ளிட்ட பல்வேறு விழாக்களுக்கு பயன்படும் வகையிலான 4,500 மி.லி. மொத்த ஐஸ்கிரீம் வகைகள் ரூ.80 முதல் ரூ.100 வரை விலை குறைக்கப்பட்டுள்ளது வரவேற்பிற்குரியது.

ஐஸ்கிரீம் என்பது அத்தியாவசிய உணவு பொருளாக இல்லை என்றாலும் கூட பால் சார்ந்த உபபொருள் என்பதால் பால் கொள்முதல் விலை உயர்வு இல்லாத இந்த தருணத்தில் ஐஸ்கிரீம் விற்பனை விலையை உயர்த்துவதை ஏற்றுக்கொள்ளமுடியாது.

அதே சமயம் ஆவினுக்கு ஏற்படும் இழப்புகளை ஈடுசெய்ய இதுபோன்ற விற்பனை விலை உயர்வு தவிர்க்க முடியாத காலத்தின் கட்டாயம் என்றாலும் கூட பால் கொள்முதல் விலை உயர்வை அரசு அறிவிக்கும் சமயத்தில் ஐஸ்கிரீம் உள்ளிட்ட பால் சார்ந்த அனைத்து வகையான பால் பொருட்களின் விற்பனை விலையை உயர்த்துவது தான் சரியான நடைமுறையாக இருக்க முடியும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads



Arputham Hospital



New Shape Tailors



Thoothukudi Business Directory