» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

தி.மு.க. ஆட்சியில் காவல் நிலைய மரணங்கள் தொடர்கதை: எடப்பாடி பழனிசாமி குற்றச்சாட்டு

செவ்வாய் 1, அக்டோபர் 2024 10:59:22 AM (IST)

தி.மு.க. ஆட்சியில் காவல் நிலைய மரணங்கள்  தொடர்கதை அகிவிட்டதாக எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி குற்றம்சாட்டியுள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்ட அறிக்கையில், ""திருச்சி மாவட்டம் பழூரைச் சேர்ந்த திராவிடமணி என்பவர், திருச்சி மத்திய சிறையில் உயிரிழந்ததாக வரும் செய்தி அதிர்ச்சியளிக்கிறது.

தி.மு.க. ஆட்சியில் காவல் நிலைய மரணங்கள் என்பது தொடர் கதையாகிவிட்ட நிலையில், காவல் துறையை தன் கட்டுப்பாட்டில் வைத்திருப்பதாக சொல்லும் தி.மு.க. முதல்வரோ, தன் வாரிசுக்கு முடி சூட்டுவதில் மட்டும் கவனம் செலுத்துவது கண்டனத்திற்குரியது.

உயிரிழந்த திராவிடமணியின் குடும்பத்தாருக்கு இழப்பீடு வழங்கவும், மரணம் குறித்த உண்மைக் காரணத்தைக் கண்டறிந்து, தொடர்புள்ளோர் மீது உரிய நடவடிக்கை எடுப்பதுடன், இனி இது போன்ற சம்பவங்கள் நிகழாவண்ணம் உறுதிசெய்யுமாறு தி.மு.க. முதல் அமைச்சரை வலியுறுத்துகிறேன்." இவ்வாறு அதில் அவர் தெரிவித்துள்ளார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads


Arputham Hospital







Thoothukudi Business Directory