» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

தடிக்காரன்கோணம் ஊராட்சியில் ரூ.1.23 கோடி வளர்ச்சி திட்ட பணிகள்: அமைச்சர் துவக்கி வைத்தார்!

வெள்ளி 20, செப்டம்பர் 2024 4:41:54 PM (IST)



தடிக்காரன்கோணம் ஊராட்சிக்குட்பட்ட பகுதியில் ரூ.1.23 கோடி மதிப்பில் வளர்ச்சி திட்ட பணிகளை பால்வளத்துறை அமைச்சர் த.மனோ தங்கராஜ் துவக்கி வைத்தார்.

கன்னியாகுமரி மாவட்டம், தடிக்காரன்கோணம் ஊராட்சிக்குட்பட்ட பகுதியில் புதிதாக கட்டி முடிக்கப்பட்ட நியாயவிலைக்கடை மற்றும் அங்கன்வாடி மையத்தினை பால்வளத்துறை அமைச்சர் த.மனோ தங்கராஜ் திறந்து வைத்து தெரிவிக்கையில்- தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் "கலைஞரின் கனவு இல்லம்" திட்டத்தின் கீழ் முதற்கட்டமாக 2024-25-ம் ஆண்டில் ஒரு லட்சம் வீடுகள் கட்டி வழங்கப்படும் என்று அறிவித்துள்ளார்கள். அதனடிப்படையில் வீடு இல்லாத ஏழை, எளிய மக்கள் பாதுகாப்புடன் வசிக்க வேண்டும் என்பதற்காக இத்திட்டம் செயல்படுத்தப்படுகிறது. ஊரகப்பகுதிகளை குடிசைகளை மாற்றி, அனைவருக்குமே பாதுகாப்பான நிரந்தர கான்கிரீட் வீடுகளை அமைத்து தருவதுதான் இந்த திட்டத்தின் முக்கிய நோக்கமாகும்.

அதனடிப்படையில் கன்னியாகுமரி மாவட்டத்திற்குட்பட்ட பகுதி மக்கள் பயன்பெறும் வகையில் கலைஞரின் கனவு இல்லத்திட்டத்தின் கீழ் தேர்வு செய்யப்பட்டள்ள 61 பயனாளிகளுக்கு வீடு கட்டும் திட்டத்திற்கான ஆணைகள் வழங்கப்பட்டது.
மேலும் தடிக்காரன்கோணம் ஊராட்சிக்குட்பட்ட வீரப்புலி மாட்டுத்தாறை பகுதியில் ரூ.88.37 இலட்சம் மதிப்பில் சாலை சீரமைக்கும் பணி துவக்கி வைக்கப்பட்டதைத்தொடர்ந்து, தடிக்காரன்கோணம் ஊராட்சிக்குட்பட்ட பொதுமக்களின் கோரிக்கையை நிறைவேற்றும் வகையில் ரூ.11 இலட்சம் மதிப்பில் நியாயவிலைக்கடை கட்டி முடிக்கப்பட்டு, பொதுமக்களின் பயன்பாட்டிற்காக இன்று திறந்து வைக்கப்பட்டுள்ளது.

அதனைத்தொடர்ந்து தடிக்காரன்கோணம் ஊராட்சிக்குட்பட்ட இந்திரா நகரில் ரூ.11.78 இலட்சத்தில் புதிதாக கட்டப்பட்டள்ள அங்கன்வாடி கட்டிடம் திறந்து வைக்கப்பட்டுள்ளது என்றார். தூய்மையே சேவை விழிப்புணர்வு பிரச்சாரத்தின் கீழ் தடிக்காரன்கோணம் ஊராட்சிக்குட்பட்ட சாலை ஓரங்களில் மரக்கன்றுகளை அமைச்சர் நட்டார். நிகழ்ச்சியில் அரசு ஒப்பந்ததார் கேட்சன், தடிக்காரன்கோணம் ஊராட்சிமன்ற தலைவர் பிராங்கிளின், துறை அலுவலர்கள், உள்ளாட்சி பிரதிநிதிகள், பயனாளிகள், பொதுமக்கள் உட்பட பலர் கலந்து கொண்டார்கள்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads






Arputham Hospital




Thoothukudi Business Directory