» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

பெண்களை ஏற்றாமல் அரசு பஸ் சென்ற விவகாரம்: டிரைவர், கண்டக்டர் பணியிடை நீக்கம்

திங்கள் 16, செப்டம்பர் 2024 8:30:35 AM (IST)

பெண்கள் கைகாட்டியும் அரசு பஸ் நிற்காமல் சென்ற விவகாரத்தில், பஸ் டிரைவர் மற்றும் கண்டக்டர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டனர்.

நாகர்கோவில் வடசேரியில் இருந்து சுசீந்திரம், அழகப்பபுரம் வழியாக நெல்லை மாவட்டம் கூட்டப்புளிக்கு கடந்த 13-ந் தேதி மாலையில் ஒரு அரசு பஸ் புறப்பட்டது. அந்த பஸ் அழகப்பபுரம் சென்றபோது அங்குள்ள பஸ் நிறுத்தத்தில் நின்று கொண்டிருந்த 2 பெண்கள் பஸ்சை நிறுத்தும்படி கை காட்டினர். ஆனால் பஸ் நிற்கவில்லை.

இதைப் பார்த்த சில வாலிபர்கள் நிற்காமல் சென்ற அரசு பஸ்சை மோட்டார் சைக்கிளில் பின் தொடர்ந்து சென்று வழிமறித்தனர். பின்னர் அந்த வாலிபர்கள் பஸ்சில் இருந்த டிரைவர் மற்றும் கண்டக்டரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். அப்போது டிரைவர் தெரியாமல் தவறு செய்து விட்டதாக தெரிவித்தார். இதையடுத்து டிரைவர் அங்கிருந்து பஸ்சை ஓட்டி சென்றார்.

தற்போது டிரைவரிடம் வாலிபர்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்ட வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இது தொடர்பாக விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்க அரசு போக்குவரத்துக் கழக அதிகாரிகள் உத்தரவிட்டனர்.

இதையடுத்து பெண்கள் கைகாட்டியும் பஸ்சை நிறுத்தாமல் சென்ற டிரைவர் ஸ்டீபன் மற்றும் கண்டக்டர் மணிகண்டன் ஆகியோரை நாகர்கோவில் மண்டல அரசு போக்குவரத்து கழக பொது மேலாளர் மெர்லின் ஜெயந்தி பணியிடை நீக்கம் செய்து உத்தரவிட்டுள்ளார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads





Arputham Hospital





Thoothukudi Business Directory