» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்
கால்நடைகளுக்கு கருச்சிதைவு நோய் தடுப்பூசி முகாம்: செப்.18 ஆம் தேதி தொடக்கம்!
வெள்ளி 13, செப்டம்பர் 2024 5:43:54 PM (IST)
திருநெல்வேலி மாவட்டத்தில் தேசிய கால்நடை தோய்த்தடுப்பு திட்டத்தின் கீழ் கருச்சிதைவு நோய் (Brucellosis) தடுப்பூசி முகாம் செப்.18 முதல் அக்.15 வரை நடைபெறவுள்ளது.
இது தொடர்பாக மாவட்ட ஆட்சியர் கார்த்திகேயன் வெளியிட்ட செய்திக்குறிப்பில், "திருநெல்வேலி மாவட்டத்தில் தேசிய கால்நடை நோய்தடுப்பு திட்டத்தின்கீழ், நான்காவது சுற்று புருசெல்லாசிஸ் நோய்தடுப்பூசிப்பணி 2024 18.09.2024 முதல் 15.10.2024 முடிய நடைபெறவுள்ளது. கருச்சிதைவு நோய் என்பது புருசெல்லா என்னும் நுண்ணுயிரியால் ஏற்படுகிறது.
இந்நோயால் கன்று வீச்சு, நஞ்சுக்கொடி தங்குதல், மீண்டும் எளிதில் சினைபிடிக்காமை, பால் உற்பத்தி குறைவு போன்ற பல காரணங்களினால் இழப்பு ஏற்படுகிறது. மேலும் இந்நோய் மனிதர்களையும் தாக்கும் தன்மையுடையது. இந்நோயினை தடுக்க 4 முதல் 8 மாத வயதுடைய கிடேரி கன்றுகளுக்கு தடுப்பூசி ஒருமுறை செலுத்துவதன் மூலம், வாழ்நாள் முழுவதும் நோய் எதிர்ப்பு சக்தியினை பெற இயலும்.
நோயின் அறிகுறிகள்
1) கருப்பையில் நோய் ஏற்படும் காரணத்தினால் சினை மாடுகளில் கருத்தரித்த 5 முதல் 8 மாத காலம் வரையிலும் கன்று வீச்சு ஏற்படும்.
2) கன்று வீச்சு ஏற்பட்ட பின் நஞ்சுக்கொடி கருப்பையில் இருந்து வெளிவராமல் தங்கிவிடும்.
3) பெண் பிறப்புறுப்பிலிருந்து சீழ் போன்ற திரவம் வடியும். மேலும் மூட்டு வீக்கம் மற்றும் மலட்டுத்தன்மை ஏற்பட வாய்ப்புண்டு.
4) காளைகளில் விரைகள் வீங்கி காணப்படும்.
5) கன்றுகள் பலவீனமாக அல்லது இறந்து பிறக்கும்.
6) இந்நோய்தாக்குதலினால் பால் உற்பத்தி மற்றும் கருத்தரிப்பு விகிதம் குறையும்.
மேலும், கூடுதல் விவரங்களுக்கு அருகிலுள்ள கால்நடை மருந்தக கால்நடை உதவி மருத்துவர் அவர்களை தொடர்புக்கொள்ளலாம். எனவே கால்நடை வளர்ப்போர் இத்தருணத்தை பயன்படுத்தி எவ்வித விடுபாடுமின்றி தங்கள் கிடேரி கன்றுகளுக்கு தடுப்பூசி போட்டுக் கொள்ளுமாறு மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

டாஸ்மாக் கடையை உடைத்து மதுபாட்டில்கள் கொள்ளை: மர்ம நபர்கள் கைவரிசை!
சனி 19, ஏப்ரல் 2025 12:52:34 PM (IST)

தமிழ்நாட்டில் 10% இட ஒதுக்கீட்டை நடைமுறைப்படுத்த வேண்டும்: வானதி சீனிவாசன் வலியுறுத்தல்
சனி 19, ஏப்ரல் 2025 12:42:11 PM (IST)

மதிமுக முதன்மைச் செயலாளர் பொறுப்பில் இருந்து விலகுவதாக துரை வைகோ அறிவிப்பு
சனி 19, ஏப்ரல் 2025 12:26:23 PM (IST)

அதிமுக கூட்டணியிலிருந்து எஸ்.டி.பி.ஐ. கட்சி விலகல்: பொதுச் செயலாளர் அறிவிப்பு!
சனி 19, ஏப்ரல் 2025 12:13:34 PM (IST)

காவல் துறையினருக்கு வார விடுமுறை அறிவிக்க கோரி உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல்!
சனி 19, ஏப்ரல் 2025 11:49:58 AM (IST)

நடிகர் பாபி சிம்ஹா கார் மோதி விபத்து: 3 பேர் படுகாயம்; டிரைவர் கைது, கார் பறிமுதல்!
சனி 19, ஏப்ரல் 2025 11:39:44 AM (IST)
