» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

ஈரோடு இடைத்தேர்தலில் நாம் தமிழர் கட்சி வேட்பாளர் சீதாலட்சுமி : சீமான் அறிவிப்பு

செவ்வாய் 14, ஜனவரி 2025 4:00:51 PM (IST)



ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலுக்கான நாம் தமிழர் கட்சியின் வேட்பாளராக சீதாலட்சுமி அறிவிக்கப்பட்டுள்ளார்.

ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தல் அடுத்த மாதம் (பிப்ரவரி) 5-ந் தேதி நடக்கிறது. இதற்கான வேட்புமனு தாக்கல் கடந்த 10-ந் தேதி ஈரோடு மாநகராட்சி அலுவலகத்தில் தொடங்கியது. இந்த இடைத்தேர்தலில் திமுக சார்பில் வி.சி.சந்திரகுமார் களம் இறக்கப்பட்டுள்ளார்.

இடைத்தேர்தலை புறக்கணிப்பதாக பிரதான எதிர்க்கட்சியான அதிமுக அறிவித்துள்ளது. அதே கூட்டணியில் அங்கம் வகிக்கும் தேமுதிகவும் தேர்தலில் போட்டியிடவில்லை. தேசிய கட்சியான பா.ஜனதாவும் தேர்தலை புறக்கணிப்பதாக அறிவித்துவிட்டது. இதனால், வாக்குப்பதிவுக்கு முன்பே தி.மு.க. வேட்பாளர் வி.சி.சந்திரகுமாரின் வெற்றி வாய்ப்பு பிரகாசமாக இருப்பதாக கூறப்படுகிறது.

இந்தத் தேர்தலில், சீமான் தலைமையிலான நாம் தமிழர் கட்சியும் போட்டியிடப் போவதாக அறிவித்துள்ளது. இதனால் தேர்தலை புறக்கணித்த அதிமுக, பாஜக, தேமுதிக ஆகிய கட்சிகளின் ஓட்டு யாருக்கு கிடைக்கும்? என்ற எதிர்பார்ப்பும் கிளம்பியுள்ளது.

இந்த நிலையில், ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலுக்கான நாம் தமிழர் கட்சியின் வேட்பாளராக சீதாலட்சுமி அறிவிக்கப்பட்டுள்ளார். இவர் பொங்கல் பண்டிகை 3 நாட்கள் விடுமுறை கழித்து வேட்புமனு தாக்கல் செய்வார் என்று தகவல் வெளியாகியுள்ளது.

இது குறித்து சீமான் வெளியிட்டுள்ள அறிக்கையில் "வருகின்ற 05-02-2025 அன்று, தமிழ்நாட்டில் நடைபெறவிருக்கும் ஈரோடு கிழக்கு சட்டமன்றத் தொகுதிக்கான இடைத்தேர்தலில் நாம் தமிழர் கட்சி சார்பாக என் அன்புத்தங்கை மா.கி.சீதாலட்சுமி (முதுகளை ஆய்வியல் நிறைஞர் (M.A. M.Phil.) அவர்கள் போட்டியிடவிருக்கிறார் என்பதைத் தெரிவித்துக்கொள்கிறேன். 

கட்சியின் மாநில, மண்டல, மாவட்ட, தொகுதி உள்ளிட்ட அனைத்துநிலைப் பொறுப்பாளர்களும், அனைத்துப் பாசறைகளின் அனைத்துநிலைப் பொறுப்பாளர்களும், நாம் தமிழர் உறவுகளும், ஈரோடு கிழக்கு சட்டமன்ற இடைத்தேர்தலில் தாம் தமிழர் கட்சியின் வெற்றிக்கு முழு ஒத்துழைப்பை நல்குமாறு அன்போடு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads


New Shape Tailors



Arputham Hospital





Thoothukudi Business Directory