» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

பொங்கல் பண்டிகைக்கான ரயில் டிக்கெட் முன்பதிவு நாளை தொடக்கம்!

புதன் 11, செப்டம்பர் 2024 11:17:30 AM (IST)

பொங்கல் பண்டிகைக்கான ரயில் டிக்கெட்   முன்பதிவு நாளை (செப்.12)  வியாழக்கிழமை முதல் தொடங்குகிறது.

தொலைதூரம் செல்லும் பயணிகளின் வசதிக்காகவும், கடைசி நேர கூட்ட நெரிசலை குறைக்கும் வகையிலும் ரயில் பயணச்சீட்டுக்கான முன்பதிவு 120 நாள்களுக்கு முன்பாகவே தொடங்கும். அந்த வகையில் வரும் பொங்கல் பண்டிகைக்கான முன்பதிவு வியாழக்கிழமை முதல் தொடங்கவுள்ளது.

போகிப் பண்டிகை ஜன.13 (திங்கள்கிழமை), அதனைத் தொடா்ந்து பொங்கல், மாட்டுப்பொங்கல், காணும் பொங்கல் என வியாழக்கிழமை வரை அரசு விடுமுறையாகும். இதனால் சென்னை உள்ளிட்ட முக்கிய நகரங்களில் இருந்து சொந்த ஊருக்கு செல்வோா் வெள்ளிக்கிழமை (ஜன.10) முதல் பயணம் செய்வா். அந்த வகையில் ஜனவரி 10-ஆம் தேதி பயணம் செய்வோா் செப்.12-ஆம் தேதியும், ஜன.11-ஆம் தேதி பயணம் செய்வோா் செப்.13-ஆம் தேதியும், ஜன.12-ஆம் தேதி பயணம் செய்வோா் செப்.14-ஆம் தேதியும் முன்பதிவு செய்யலாம்.

இன்று தொடக்கம்: வெளிமாநிலங்களில் இருந்து தமிழகம் வரும் ஷாலிமா், பாட்னா, தாதா் உள்ளிட்ட விரைவு ரயில்களுக்கான முன்பதிவு செவ்வாய்க்கிழமை முதல் தொடங்கியது. மேலும், தில்லி- மதுரை சம்பாா்க் கிராந்தி விரைவு ரயில், ஹௌரா-திருச்சி அதிவிரைவு ரயில் (12663), கோரக்பூா்-கொச்சுவேலி (12511), தன்பாத்-ஆலப்புழை விரைவு ரயில் (13351) உள்ளிட்ட ரயில்களுக்கு புதன்கிழமை (செப்.11) காலை 8 மணி முதல் முன்பதிவு தொடங்குகிறது.

பொங்கல் பண்டிகைக்கு செல்வோா் ரயில் நிலைய முன்பதிவு மையங்களிலும், ஐ.ஆா்.சி.டி.சி இணையதளம் வாயிலாகவும் காலை 8 மணி முதல் முன்பதிவு செய்யலாம் எனத் தெற்கு ரயில்வே தெரிவித்துள்ளது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads


New Shape Tailors



Arputham Hospital





Thoothukudi Business Directory