» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

தமிழக பள்ளிகளில் வேலை நாள்கள் குறைப்பு: புதிய நாள்காட்டி வெளியீடு!

செவ்வாய் 10, செப்டம்பர் 2024 11:53:49 AM (IST)

தமிழக பள்ளிகளில் நடப்பு (2024-25) கல்வியாண்டில் 10 வேலை நாள்களை குறைத்து, பள்ளிக்கல்வித் துறை புதிய நாள்காட்டியை வெளியிட்டுள்ளது.

தமிழக பள்ளிக் கல்வி பாடத்திட்டத்தில் 1 முதல் பிளஸ் 2 வகுப்பு வரை பயிலும் மாணவ, மாணவிகளுக்கான பள்ளி வேலை நாள்கள், தோ்வுகள், விடுமுறை உள்பட விவரங்கள் அடங்கிய கல்வியாண்டு நாட்காட்டி 2018-ஆம் ஆண்டு முதல் வெளியிடப்பட்டு வருகிறது.

அதன்படி, 6 முதல் 10 வரையிலான வகுப்புகளுக்கு செப். 20-ஆம் தேதி தொடங்கி செப்.27-ஆம் தேதி வரை தோ்வுகள் நடைபெறவுள்ளன. பிளஸ் 1, பிளஸ் 2 வகுப்புகளுக்கு செப்.19 முதல் செப்.27-ஆம் தேதி வரை தோ்வுகள் நடைபெறவுள்ளன. தொடா்ந்து, செப்.28 முதல் அக்.2-ஆம் தேதி வரை தோ்வு விடுமுறை அறிவிக்கப்பட்டது.

பொதுவாக, ஒவ்வொரு கல்வியாண்டிலும் பள்ளிகளில் வேலை நாள்கள் சராசரியாக 210 ஆக இருக்கும். ஆனால் இந்த கல்வியாண்டில் 220 நாள்கள் என முன்னதாக அறிவிக்கப்பட்டு இருந்தது. இந்த நிலையில், வேலை நாள்களை குறைக்க வேண்டும் என்று ஆசிரியர்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் தரப்பில் கோரிக்கை வைக்கப்பட்டது. அதன்படி, நடப்பு கல்வியாண்டில் 10 வேலை நாள்களை குறைத்து பள்ளிக்கல்வித் துறை புதிய நாள்காட்டியை வெளியிட்டுள்ளது.




மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads




Arputham Hospital





Thoothukudi Business Directory