» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்
மின்சாரம் தாக்கி கணவன்-மனைவி பலி : நாகர்கோவிலில் பரிதாபம்!
திங்கள் 9, செப்டம்பர் 2024 5:02:07 PM (IST)
நாகர்கோவிலில் மின்சாரம் தாக்கி கணவன்-மனைவி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
கன்னியாகுமரி மாவட்டம், நாகர்கோவில், நாகராஜகோவில் அருகே திலகர் தெருவில் வீட்டின் பின்புறம் துணி காயப்படும் போது கம்பியில் கைப்பட்டு ரத்தினமனி மற்றும் அவரது மனைவி நீலா ஆகிய இருவரும் மின்சாரம் தாக்கி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.
இதுகுறித்து வடசேரி போலீசார் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.