» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

ஈரோடு கிழக்கு தொகுதி அதிமுக வேட்பாளர் தென்னரசு : இபிஎஸ் அறிவிப்பு

புதன் 1, பிப்ரவரி 2023 10:06:37 AM (IST)

ஈரோடு கிழக்கு  தொகுதி இடைத்தேர்தலில் அதிமுக வேட்பாளராக முன்னாள் எம்எல்ஏ கே.எஸ்.தென்னரசு அறிவிக்கப்பட்டுள்ளார்.

கங்கிரஸ் எம்எல்ஏ திருமகன் ஈவெரா திடீர் மறைவால் ஈரோடு கிழக்குத் தொகுதிக்கு வரும் பிப்ரவரி 27ஆம் தேதி இடைத்தேர்தல் நடைபெற உள்ளது. திமுக கூட்டணியில் காங்கிரஸ் கட்சி போட்டியிடுகிறது. வேட்பாளராக காங்கிரஸ் மூத்த தலைவரும் திருமகன் ஈவெரா தந்தையுமான ஈவிகேஎஸ்.இளங்கோவன் போட்டியிடுகிறார். திமுகவும் கூட்டணிக் கட்சிகளும் ஒரு வாரத்துக்கு முன்பே மக்களை வீடு வீடாகச் சந்தித்து தேர்தல் பிரசாரத்தைத் தொடங்கிவிட்டன.

இந்நிலையில் ஈரோடு கிழக்கு தொகுதி வேட்பாளராக முன்னாள் எம்எல்ஏ கே.எஸ்.தென்னரசுவை அதிமுக இடைக்காலப் பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார். இதனைத் தொடர்ந்து ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலுக்கான பணிமனை திறக்கப்பட்டு வேட்பாளர் அறிவிப்பு நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்வில், இடைத்தேர்தல் பொறுப்பாளர் செங்கோட்டையன், முன்னாள் அமைச்சர்கள் பங்கேற்றனர்.

அதிமுக வேட்பாளராக நிறுத்தப்பட்டுள்ள கே.எஸ்.தென்னரசு, பிரிக்கப்படாமல் ஒரே தொகுதியாக ஈரோடு இருந்தபோது 2001 தேர்தல், ஈரோடு கிழக்கு தொகுதியாக பிரிக்கப்பட்ட பிறகு 2016 தேர்தலில் போட்டியிட்டு வெற்றிபெற்றுள்ளார். 2021 தேர்தலில் தமாக வேட்பாளரான எம்.யுவராஜாவுக்கு இந்த தொகுதியை விட்டுக்கொடுத்து குறிப்பிடத்தக்கது.


மக்கள் கருத்து

ஜெ . தொண்டர்கள்Feb 1, 2023 - 03:52:33 PM | Posted IP 162.1*****

பாஜக கூட்டணியுடன் EPS தலைமையில் அதிமுக கண்டிப்பாக வெற்றிபெறும். OPS + சசி கூட்டத்தை விரட்டிவிடுங்கள் . வெற்றி நமதே .

மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads

Thoothukudi Business Directory