» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

செந்தில் பாலாஜியின் காவல் 35-வது முறையாக நீட்டிப்பு : நீதிமன்றம் உத்தரவு!!

வியாழன் 25, ஏப்ரல் 2024 4:45:12 PM (IST)

சட்டவிரோத பண பரிமாற்ற தடை சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்ட செந்தில் பாலாஜியின் நீதிமன்றக் காவலை வரும் 30-ம் தேதி வரை நீட்டித்து நீதிமன்றம் உத்தரவிட்டது.

சட்டவிரோத பண பரிமாற்ற தடை சட்டத்தின் கீழ் அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்ட முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி புழல் சிறையில் அடைக்கப்பட்டு உள்ளார். இதையடுத்து ஜாமீன் கோரி செந்தில்பாலாஜி தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட மனுக்களை சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம், மற்றும் சென்னை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்தன. 

தொடர்ந்து ஜாமீன் கோரி உச்ச நீதிமன்றத்தில் செந்தில் பாலாஜி மனு தாக்கல் செய்தார். அந்த மனு நிலுவையில் இருந்து வருகிறது. இந்தநிலையில், செந்தில் பாலாஜியின் நீதிமன்ற காவல் ஏப்ரல் 25-ம் தேதி வரை நீட்டித்து சென்னை முதன்மை அமர்வு நீதிமன்ற நீதிபதி அல்லி உத்தரவிட்டார். மேலும் நீதிமன்ற காவல் முடியும் ஏப்ரல் 25-ம் தேதி காணொளியில் ஆஜராகும்படி நீதிபதி அல்லி உத்தரவிட்டார். 

இந்த நிலையில் இன்றுடன் செந்தில் பாலாஜியின் நீதிமன்றக் காவல் முடிவடைந்ததை அடுத்து அவர் காணொளி மூலம் ஆஜர்படுத்தப்பட்டார். அப்போது அவரது நீதிமன்றக் காவலை வரும் 30-ம் தேதி வரை நீட்டித்து நீதிபதி அல்லி உத்தரவிட்டார். இதன் மூலம் செந்தில் பாலாஜியின் நீதிமன்றக் காவல் 35-வது முறையாக நீட்டிக்கப்பட்டுள்ளது


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads






Arputham Hospital






Thoothukudi Business Directory