» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

தாம்பரம் ரயில் நிலையத்தில் கல்லூரி மாணவி குத்திக்கொலை : பட்டப்பகலில் பயங்கரம்

வியாழன் 23, செப்டம்பர் 2021 4:13:05 PM (IST)

தாம்பரம் ரயில் நிலைய வாயிலில் கல்லூரி மாணவி ஒருவர் கத்தியால் குத்திக் கொலை செய்யப்பபட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சென்னையை அடுத்த தாம்பரம் ரயில் நிலைய வாயிலில் வியாழக்கிழமை மதியம் ஸ்வேதா என்ற கல்லூரி மாணவி நின்று கொண்டிருந்தார். அப்போது மாணவி ஸ்வேதாவை ராமு என்ற இளைஞர் கத்தியால் குத்தியுள்ளார். அதன்பிறகு, அந்த இளைஞரும் கழுத்தை அறுத்து தற்கொலைக்கு முயற்சித்துள்ளார். 

இருவரையும் மீட்டு குரோம்பேட்டை அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக காவல்துறையினர் அனுப்பி வைத்தனர். இருப்பினும், சிகிச்சை பலனளிக்காமல் மாணவி ஸ்வேதா உயிரிழந்தார். கத்தியால் குத்திய ராமுவுக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகின்றது. கடந்த 2016ஆம் ஆண்டு ஸ்வாதி என்ற இளம்பெண்ணை நுங்கம்பாக்கம் ரயில் நிலையத்தில் கொலை செய்தது குறிப்பிடத்தக்கது.


மக்கள் கருத்து

உண்மSep 23, 2021 - 09:06:35 PM | Posted IP 162.1*****

கொலைகாரனின் பெற்றோர் வளர்ப்பு சரியில்லை...

மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads

Nalam Pasumaiyagam

Black Forest Cakes
Thoothukudi Business Directory