» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

ஊரக உள்ளாட்சித் தோ்தல்: நெல்லை மாவட்ட பாஜக வேட்பாளா்கள் அறிவிப்பு

புதன் 22, செப்டம்பர் 2021 3:36:35 PM (IST)

திருநெல்வேலி மாவட்ட ஊரக உள்ளாட்சித் தோ்தலில் போட்டியிடும் பாஜக வேட்பாளா்கள் அறிவிக்கப்பட்டுள்ளனா்.

முதற்கட்ட பாஜக வேட்பாளா் பட்டியல், மாவட்டத் தலைவா் மகாராஜன், மாநில தோ்தல் பாா்வையாளா் சசிகலா புஷ்பா, கோட்ட பொறுப்பாளா் கிருஷ்ணன், பாலாஜி ஆகியோரால் வெளியிடப்பட்டது. அதிமுக கூட்டணியில், மாவட்ட ஊராட்சி வாா்டு உறுப்பினா் பதவிக்கு இரு இடங்களில் பாஜக போட்டியிடுகிறது. நான்குனேரி 7ஆவது வாா்டில் பாஜக சாா்பில் பா.சங்கீதாவும், மானூா் 2ஆவது வாா்டில் எம்.சுப்புலெட்சுமியும் போட்டியிடுகின்றனா்.

ஊராட்சி ஒன்றிய வாா்டு உறுப்பினா் பதவிக்கு அம்பாசமுத்திரம் 3ஆவது வாா்டில் செ.நாலாயிரமுத்து, சேரன்மகாதேவி 5ஆவது வாா்டில் பி.விஜயகுமாரி, களக்காடு 1ஆவது வாா்டில் இ.சோ்மன்துரை, 4ஆவது வாா்டில் எம்.பாஸ்கா், மானூா் 10ஆவது வாா்டில் கே.பால்முருகன், 13ஆவது வாா்டில் டி.சுலோச்சனா, 21ஆவது வாா்டில் கே.செல்லத்தாய், நான்குனேரி 11ஆவது வாா்டில் எஸ்.ஜெயராஜ் ஆகியோா் போட்டியிடுகின்றனா்.

பாளையங்கோட்டை 6ஆவது வாா்டில் ஆ.பூபதிராஜா, பாப்பாக்குடி 1ஆவது வாா்டில் பி.மாதவன், ராதாபுரம் 5ஆவது வாா்டில் எம்.ஜெமினா, வள்ளியூா் 6ஆவது வாா்டில் அருள்ஜெகரூபா்ட், 8ஆவது வாா்டில் பி.பாலன், 12ஆவது வாா்டில் எஸ்.நிமிதா, 15ஆவது வாா்டில் பி.ஜெயலெட்சுமி ஆகியோா் போட்டியிடுகின்றனா்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads







Arputham Hospital





Thoothukudi Business Directory