» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

வேலூரில் நீட் தேர்வு எழுதிய மாணவி தற்கொலை: தொடரும் உயிரிழப்புகளால் சோகம்!

புதன் 15, செப்டம்பர் 2021 4:43:09 PM (IST)

வேலூரில் நீட் தேர்வில் எதிர்பார்த்த மதிப்பெண்கள் வராது என்ற விரக்தியில் மாணவி தற்கொலை செய்து கொண்டதாக தகவல் வெளியாகி உள்ளது. 

எம்.பி.பி.எஸ்., பி.டி.எஸ். போன்ற இளநிலை மருத்துவ படிப்புகளில் சேருவதற்கான ‘நீட்’ தேர்வு நாடு முழுவதும் கடந்த ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. நீட் தேர்வு பயத்தால் தனுஷ் என்ற மாணவரும்,  கனிமொழி என்ற மாணவியும் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்நிலையில், காட்பாடி அடுத்த தலையாரம்பட்டு கிராமத்தைச் சேர்ந்த மாணவி செளந்தர்யா தற்கொலை செய்து கொண்டார். நீட் தேர்வில் எதிர்பார்த்த மதிப்பெண்கள் வராது என்ற விரக்தியில் வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் மாணவி தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படுகிறது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads








Arputham Hospital




Thoothukudi Business Directory