» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

தமிழகத்தில் 100 போலீஸ் அதிகாரிகளுக்கு அண்ணா பதக்கம்: தமிழக அரசு அறிவிப்பு

புதன் 15, செப்டம்பர் 2021 12:40:53 PM (IST)

தமிழகத்தில் 5 எஸ்பிக்கள் உள்பட 100 போலீசாருக்கு அண்ணா பதக்கம் வழங்கி தமிழக அரசு அறிவித்துள்ளது.

தமிழக காவல்துறையில் சிறப்பாக பணிபுரியும் காவல் ஆளிநர்களுக்கு ஆண்டு தோறும் அண்ணா பிறந்த நாளன்று  அண்ணா விருது வழங்கி தமிழக அரசு கவுரவிக்கிறது. அதன்படி டிஎஸ்பிக்களுக்கு ரூ. 15 ஆயிரம் மற்றும் பதக்கமும், இன்ஸ்பெக்டர்களுக்கு ரூ. 10 ஆயிரமும் ரொக்கப் பரிசாக வழங்கப்படுகிறது.

இந்த ஆண்டு 5 எஸ்பிக்கள் உள்பட 100 போலீஸ் அதிகாரிகள் அண்ணா விருது பெற்றுள்ளனர். அது தொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள உத்தரவில்: சென்னை திருவல்லிக்கேணி துணை கமிஷனர் பகலவன், நாமக்கல் எஸ்பி சரோஜ் குமார் தாகூர், காஞ்சிபுரம் எஸ்பி சுதாகர், திண்டுக்கல் எஸ்பி சீனிவாசன், சென்னை மத்திய குற்றப்பிரிவு துணைக்கமிஷனர் மீனா ஆகிய 5 பேர் அண்ணா பதக்கம் பெற்றுள்ளனர். 

மேலும் விருதுநகர் குழந்தைகள், பெண்கள் குற்றத்தடுப்புப் பிரிவு ஏடிஎஸ்பி மாரிராஜன், மதுரை போலீஸ் பயிற்சி பள்ளி ஏடிஎஸ்பி மணி, திருப்பூர் நகர நுண்ணறிவுப்பிரிவு உதவிக்கமிஷனர் ராதாகிருஷ்ணன், வடக்கு மண்டல ஒருங்கிணைந்த குற்றப்பிரிவு டிஎஸ்பி ரவிந்திரன், திருவண்ணாமலை டிஎஸ்பி அண்ணாதுரை, சென்னை கொரட்டூர் குற்றப்பிரிவு இன்ஸ்பெக்டர் ஜெகதீசன், நெல்லை உளவுப்பிரிவு இன்ஸ்பெக்டர் மனோகரன், ராணிப்பேட்டை போக்குவரத்துப் பிரிவு முகேஷ்குமார் உள்பட 100  போலீஸ் அதிகாரிகள் அண்ணா பதக்கம் பெற்றுள்ளனர். இவ்வாறு அந்த அறிவிப்பில் கூறப்பட்டுள்ளது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads






Arputham Hospital






Thoothukudi Business Directory