» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

மருத்துவ படிப்பில் ஓபிசி பிரிவினருக்கு 27 சதவீத இட ஒதுக்கீடு : கமல் ஹாசன் வரவேற்பு

சனி 31, ஜூலை 2021 3:41:45 PM (IST)

மருத்துவ படிப்பில் மத்திய தொகுப்பில் ஓபிசி பிரிவினருக்கு 27 சதவீதம் ஒதுக்கீடை அமல்படுத்த மத்திய அரசு முடிவு செய்திருப்பதை கமல்ஹாசன் வரவேற்றுள்ளார். 

மருத்துவ படிப்பில் அகில இந்திய ஒதுக்கீட்டில் இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு 27 சதவீதமும், பொருளாதாரத்தில் நலிந்தவர்களுக்கு 10 சதவீதமும் இட ஒதுக்கீட்டை இந்த கல்வி ஆண்டு முதலே அமல்படுத்த மத்திய அரசு முடிவு செய்துள்ளது. 

இந்த நிலையில் மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல் ஹாசன் டுவிட்டர் பக்கத்தில் ‘‘மருத்துவப் படிப்பிற்கான மத்திய தொகுப்பில் ஓபிசி பிரிவினருக்கு 27% இட ஒதுக்கீடு சாத்தியமாகி இருப்பது சமூகநீதிப் பயணத்தில் குறிப்பிடத்தக்க வெற்றி. நீட் தேர்வு ரத்து, மத்திய தொகுப்புமுறையை கைவிடுதல் என நாம் எட்ட வேண்டிய இலக்குகள் இன்னும் இருக்கின்றன’’ எனக் குறிப்பிட்டுள்ளார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads


Arputham Hospital










Thoothukudi Business Directory