» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

குதிரைகளை கட்டாயம் பதிவு செய்ய வேண்டும்: தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அறிப்பு!

செவ்வாய் 25, ஆகஸ்ட் 2026 4:03:25 PM (IST)

Horsebeach.jpg

தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள அனைத்து குதிரை உரிமையாளர்களும் தங்களிடம் உள்ள குதிரைகள் குறித்த முழுமையான விவரங்களை பதிவு செய்ய வேண்டும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. 

தூத்துக்குடி மாவட்டத்தில் குதிரை சவாரி, பொருட்களை எடுத்துச்செல்லுதல், பயணிகளை ஏற்றிச்செல்லுதல், சவாரிப் பயிற்சி பள்ளிகள், பந்தயம் மற்றும் திருமண நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல்வேறு பயன்பாடுகளுக்காக பயன்படுத்தப்படும் குதிரைகள் மற்றும் பிற குதிரையினங்களையும் தமிழ்நாடு விலங்கு நல வாரியத்தின் இணையதளத்தில் கட்டாயமாக பதிவு செய்யப்பட வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

குதிரை உரிமையாளர்கள் தங்களிடம் உள்ள குதிரைகள் மற்றும் பிற குதிரையினங்களின் முழுமையான விவரங்களை தமிழ்நாடு விலங்கு நல வாரியத்தின் அதிகாரபூர்வ இணையதளத்தில் பதிவு செய்ய வேண்டும். மேலும், குதிரைகளின் நலன், சுகாதாரம், பாதுகாப்பு மற்றும் மனிதாபிமான பராமரிப்பு தொடர்பான நடைமுறைகள் மற்றும் விதிமுறைகளை உரிமையாளர்கள் கட்டாயமாக கடைபிடிக்க வேண்டும்.

பதிவு பெறுவதற்கு உள்ளாட்சி அமைப்புகளிடமிருந்து தேவையான உரிமம் பெற்றிருத்தல், உரிமையாளர்கள் மீது விலங்குகளை கொடுமைப்படுத்துதல் அல்லது அலட்சியமாக பராமரித்தல் தொடர்பான வழக்குகள் இல்லாதிருத்தல், குதிரைகள் மற்றும் அவற்றின் தங்குமிடங்களை ஆய்வு செய்ய அதிகாரிகளுக்கு அனுமதி அளித்தல், உரிமை மற்றும் அடையாள ஆவணங்களை சமர்ப்பித்தல் உள்ளிட்ட நிபந்தனைகளை பூர்த்தி செய்ய வேண்டும். 

மேலும் குதிரைகள் மற்றும் பிற குதிரையினங்கள் தங்குமிடங்களில் போதிய காற்றோட்டம் சுகாதாரம், பாதுகாப்பு, கழிவுநீர் மற்றும் கழிவு மேலாண்மை வசதிகள், வெயில் மற்றும் மழையிலிருந்து பாதுகாப்பு, போதிய குடிநீர் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் ஏற்படுத்தப்பட்டிருக்க வேண்டும்.

எனவே தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள அனைத்து குதிரை உரிமையாளர்களும் தங்களிடம் உள்ள குதிரைகள் மற்றும் பிற குதிரையினங்களின் முழுமையான விவரங்களை தமிழ்நாடு விலங்கு நல வாரியத்தின் அதிகாரபூர்வ இணையதளத்தில் 30.08.2026 க்குள் பதிவு செய்து விலங்குகள் நல விதிமுறைகளை கடைபிடிக்க வேண்டும். பதிவு மற்றும் வழிகாட்டுதலுக்கு அருகிலுள்ள கால்நடை மருத்துவமனையை அணுகலாம் என மாவட்ட ஆட்சியர் விஷு மகாஜன் தெரிவித்துள்ளார். 


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads









Thoothukudi Business Directory