» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
பள்ளிகளுக்கு அனைத்து சனிக்கிழமைகளிலும் விடுமுறை: புதிய கல்வியாண்டு நாள்காட்டி வெளியீடு!
சனி 20, ஜூன் 2026 4:45:13 PM (IST)
தமிழகத்தில் பள்ளிக் கல்வித் துறை கட்டுப்பாட்டின் கீழ் செயல்படும் அரசு, அரசு உதவி பெறும் மற்றும் தனியார் பள்ளிகளுக்கான 2026-2027ஆம் கல்வியாண்டுக்கான அதிகாரப்பூர்வ நாள்காட்டியைப் பள்ளிக் கல்வித் துறை வெளியிட்டுள்ளது.
இதில் ஆசிரியர்கள் மற்றும் கல்வியாளர்களின் நீண்டகால கோரிக்கையை ஏற்று, அனைத்து சனிக்கிழமைகளும் பள்ளிகளுக்கு விடுமுறை என்ற மிக முக்கியமான அறிவிப்பு வெளியாகியுள்ளது.
இந்த புதிய நாள்காட்டி மற்றும் விடுமுறை விபரங்கள் வருமாறு:
வேலை நாள்கள் குறைப்பு - சனிக்கிழமை விடுமுறை:
நடப்புக் கல்வியாண்டில், மொத்தம் உள்ள 365 நாள்களில் பள்ளி வேலை நாள்களின் எண்ணிக்கை 210 ஆகக் குறைக்கப்பட்டுள்ளது. இதுவரை 220 நாள்கள் வேலை நாள்களாக இருந்து வந்த நிலையில், தற்போது 10 நாள்கள் குறைக்கப்பட்டு விடுமுறை நாள்கள் 155 ஆக உயர்த்தப்பட்டுள்ளது. ஒட்டுமொத்தமாக 22 நாள்கள் அரசு பொது விடுமுறை நாள்களாகும்.
புதிய நாள்காட்டியின்படி, ஒட்டுமொத்த மொத்த சனிக்கிழமைகளில் ஜூலை 19, செப்டம்பர் 19 மற்றும் டிசம்பர் 3 ஆகிய மூன்று சனிக்கிழமைகள் மட்டுமே பள்ளி வேலை நாள்களாக இருக்கும். மற்ற அனைத்து சனிக்கிழமைகளும் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளுக்கு விடுமுறை நாள்களாகும்.
தேர்வு மற்றும் விடுமுறை அட்டவணை:
1 முதல் 12ஆம் வகுப்பு வரை அனைத்து வகுப்புகளுக்குமான காலாண்டுத் தேர்வு செப்டம்பர் 17 முதல் 25ஆம் தேதி வரை நடைபெறவுள்ளது. தொடர்ந்து, செப்டம்பர் 26 முதல் அக்டோபர் 4ஆம் தேதி வரை காலாண்டு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
அரையாண்டுத் தேர்வு டிசம்பர் 16இல் தொடங்கி 23 வரை நடைபெறும். அதன் தொடர்ச்சியாக, டிசம்பர் 24 முதல் ஜனவரி 3 வரை அரையாண்டு விடுமுறையாகும். ஜனவரி 4ஆம் தேதி மீண்டும் பள்ளிகள் திறக்கப்படும்.
நடப்புக் கல்வியாண்டின் கடைசி வேலை நாளாக 2027 ஏப்ரல் 23ஆம் தேதி நிர்ணயிக்கப்பட்டுள்ளது. ஏப்ரல் 24 முதல் மாணவர்களுக்குக் கோடை விடுமுறை தொடங்குகிறது. பத்தாம் வகுப்பு மற்றும் பிளஸ் 2 மாணவர்களுக்கான பொதுத்தேர்வு தேதிகள் பின்னர் அறிவிக்கப்படும்.
பண்டிகைக்கால தொடர் விடுமுறைகள்:
கிருஷ்ண ஜெயந்தி: செப்டம்பர் 4 (வெள்ளி) பண்டிகை வருவதால் வார இறுதி நாள்களுடன் சேர்த்து 3 நாள்கள் தொடர் விடுமுறை.
விநாயகர் சதுர்த்தி: செப்டம்பர் 14 (திங்கள்) பண்டிகை வருவதால் வார இறுதி நாள்களுடன் சேர்ந்து 3 நாள்கள் விடுமுறை.
ஆயுத பூஜை, விஜயதசமி: அக்டோபர் 19, 20 (திங்கள், செவ்வாய்) ஆகிய தேதிகளில் வருவதால் சனி, ஞாயிறுடன் சேர்த்து 4 நாள்கள் தொடர் விடுமுறை.
தீபாவளி: நவம்பர் 8ஆம் தேதி தீபாவளி ஞாயிற்றுக்கிழமை வருவதால் வார விடுமுறையாக 2 நாள்கள் மட்டுமே விடுமுறை கிடைக்கிறது.
பொங்கல்: ஜனவரி 15 முதல் 17 வரை வெள்ளி, சனி, ஞாயிறு எனத் தொடர்ந்து 3 நாள்கள் விடுமுறை கிடைக்கும்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் சர்வதேச யோகா தினம்: மருத்துவர்கள், செவிலியர்கள் பங்கேற்பு!
சனி 20, ஜூன் 2026 12:37:39 PM (IST)

தூத்துக்குடி மீன்வளக் கல்லூரியில் நிறுவன தின விழா: 600-க்கும் மேற்பட்ட பள்ளி மாணவர்கள் பங்கேற்பு!
சனி 20, ஜூன் 2026 12:27:04 PM (IST)

சட்டவிரோதமாக மதுபான விற்பனை: ஒருவர் கைது!
சனி 20, ஜூன் 2026 11:49:52 AM (IST)

கிடப்பில் போடப்பட்ட சாலை விரிவாக்கப் பணிகள் : மாணவர்கள், வாகன ஓட்டிகள் கடும் அவதி!
சனி 20, ஜூன் 2026 11:40:05 AM (IST)

தூத்துக்குடியில் மூதாட்டியிடம் 1 பவுன் தங்கச் செயின் பறிப்பு: மர்மப் பெண்ணுக்கு போலீஸ் வலைவீச்சு!
சனி 20, ஜூன் 2026 11:25:11 AM (IST)

காதலியுடன் கருத்து வேறுபாடு: வாலிபர் தற்கொலை - தூத்துக்குடியில் சோகம்!
சனி 20, ஜூன் 2026 11:16:27 AM (IST)









