» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
குடும்பத் தகராறில் விஷம் குடித்த வாலிபர் பலி!
புதன் 20, மே 2026 12:15:03 PM (IST)
தூத்துக்குடி அருகே மனைவியுடன் ஏற்பட்ட குடும்பத் தகராறு காரணமாகப் பூச்சிக்கொல்லி மருந்து குடித்த வாலிபர் மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார்.
தூத்துக்குடி மாவட்டம் எட்டயபுரம் அருகேயுள்ள பேரிலோவன்பட்டி, மேலத்தெருவைச் சேர்ந்தவர் தனுஷ்கோடி மகன் முத்து வீர சின்னையா (39). இவரது மனைவி காயத்ரி. இந்நிலையில், முத்து வீர சின்னையா அதே பகுதியைச் சேர்ந்த பெண்ணுடன் பழகி வந்ததாகக் கூறப்படுகிறது. இதனை அவரது மனைவி காயத்ரி கண்டித்துள்ளார்.
இதனால் கணவன்-மனைவி இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. இதனால் மனவேதனையடைந்த முத்து வீர சின்னையா, கடந்த மே 15-ஆம் தேதி விஷப் பூச்சிக்கொல்லி மருந்தை குடித்துத் தற்கொலைக்கு முயன்றுள்ளார். அவரை குடும்பத்தினர் மீட்டு தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலன் தராமல் இன்று காலை அவர் உயிரிழந்தார். இதுகுறித்து எட்டயபுரம் காவல் நிலைய போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

தூத்துக்குடி மாநகரப் பகுதிகளில் நாளை மின்தடை!
புதன் 20, மே 2026 8:35:37 PM (IST)

தூத்துக்குடி எஸ்பியாக அபிஷேக் குப்தா ஐ.பி.எஸ் நியமனம் - தமிழக அரசு உத்தரவு!
புதன் 20, மே 2026 8:18:36 PM (IST)

தூத்துக்குடி - மும்பை ரயில் 7½ மணி நேரம் தாமதம்: இன்று இரவு 11.00 மணிக்கு புறப்படும்!
புதன் 20, மே 2026 7:58:41 PM (IST)

தூத்துக்குடியில் மே 22-ல் மின்தடை அறிவிப்பு!
புதன் 20, மே 2026 5:45:57 PM (IST)

தூத்துக்குடி விமான நிலையத்தில் முறையற்ற கட்டணம் வசூல் : கனிமொழி எம்பி தலையிட கோரிக்கை!
புதன் 20, மே 2026 4:15:50 PM (IST)

பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு: திருச்செந்தூர் ஸ்டார்ஸ் மாடல் மெட்ரிகுலேஷன் மேல்நிலைப்பள்ளி சாதனை!
புதன் 20, மே 2026 3:54:24 PM (IST)










