» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

பைக் விபத்தில் முதியவர் பரிதாப பலி: 2பேர் படுகாயம்!

புதன் 20, மே 2026 3:35:56 PM (IST)

சாத்தான்குளம் அருகே, மனநலம் பாதிக்கப்பட்ட நபர் திடீரென குறுக்கே பாய்ந்ததால் நிகழ்ந்த விபத்தில் பைக்கை ஓட்டி வந்த முதியவர் பரிதாபமாக உயிரிழந்தார்.

தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளம், செட்டியார் தெருவைச் சேர்ந்தவர் ராமச்சந்திரன் மகன் மோகன் (62). இவர் நேற்று இரவு சாத்தான்குளம் தச்சமொழி பகுதியைச் சேர்ந்த பாண்டி மகன் ரவிச்சந்திரன் (50) என்பவரைத் தனது மோட்டார் சைக்கிளின் பின்னால் அமர வைத்துக் கொண்டு, உடன்குடி - திசையன்விளை பிரதான சாலையில் சென்று கொண்டிருந்தார்.

இவர்களது பைக் சாத்தான்குளம் அருகே உள்ள தங்கை கைலாசபுரம் சாலையில் வந்துகொண்டிருந்தது. அப்போது, அந்தச் சாலையில் சுமார் 50 வயது மதிக்கத்தக்க, அடையாளம் தெரியாத மனநலம் பாதிக்கப்பட்ட நபர் பைக்கின் முன்பாகத் திடீரெனக் குறுக்கே பாய்ந்துள்ளார். இதனால் பைக் அவர் மீது மோதிச் சாலையில் சாய்ந்து விபத்துக்குள்ளானது. 

இந்த விபத்தில் பைக்கை ஓட்டி வந்த மோகன், தலையில் பலத்த காயம் ஏற்பட்டு சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். பைக்கின் பின்னால் அமர்ந்து வந்த ரவிச்சந்திரனுக்குக் பலத்த காயங்கள் ஏற்பட்டன. பைக் மோதியதில் சாலையில் நடந்து சென்ற அந்த அடையாளம் தெரியாத மனநலம் பாதிக்கப்பட்ட நபரின் இடது கால் முறிந்தது. 

விபத்தைக் கண்டு அதிர்ச்சியடைந்த அப்பகுதி பொதுமக்கள், ரவிச்சந்திரனையும் காயமடைந்த மனநலம் பாதிக்கப்பட்ட நபரையும், 108 ஆம்புலன்ஸ் மூலம் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். உயிரிழந்த மோகனின் உடலைக் கைப்பற்றிப் பிரேதப் பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. இச்சம்பவம் குறித்துச் சாத்தான்குளம் காவல் நிலைய போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். 


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

K.CHINNADURAI & CO AND GOLD HOUSE

Sponsored Ads






Arputham Hospital



Thoothukudi Business Directory