» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு: திருச்செந்தூர் ஸ்டார்ஸ் மாடல் மெட்ரிகுலேஷன் மேல்நிலைப்பள்ளி சாதனை!

புதன் 20, மே 2026 3:54:24 PM (IST)



பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகளில், திருச்செந்தூர் ஸ்டார்ஸ் மாடல் மெட்ரிகுலேஷன் மேல்நிலைப்பள்ளி மாணவி பெர்னிஸ் செல்வகுமாரி 500-க்கு 496 மதிப்பெண்கள் பெற்று  சாதனை படைத்துள்ளார். 

பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகளை தமிழக அரசுப் பள்ளிக் கல்வித்துறை இன்று அதிகாரப்பூர்வமாக வெளியிட்டது. இதில், தூத்துக்குடி மாவட்டத்தின் திருச்செந்தூர் குமாரபுரம் பகுதியில் உள்ள ஸ்டார்ஸ் மாடல் மெட்ரிகுலேஷன் மேல்நிலைப்பள்ளி மாணவர்கள் அனைவரும் முழுமையாகத் தேர்ச்சி பெற்று 100% நூறு சதவீத தேர்ச்சி விகிதத்தைப் பதிவு செய்துள்ளது. 

மேலும், இப்பள்ளியில் பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதிய மாணவி பெர்னிஸ் செல்வகுமாரி, 500-க்கு 496 மதிப்பெண்கள் பெற்று, பள்ளியின் முதல் மாணவியாக முதலிடத்தைப் பிடித்துள்ளார். மேலும் அவர் தமிழக அளவில் 4-ஆவது இடத்தை பெற்று பள்ளிக்கும் தூத்துக்குடி மாவட்டத்திற்கும் பெருமை சேர்த்துள்ளார். 

சாதனை புரிந்த மாணவி பெர்னிஸ் செல்வகுமாரிக்கும், 100% தேர்ச்சி பெற உழைத்த பிற மாணவச் செல்வங்களுக்கும் பள்ளியின் வளாகத்தில் பாராட்டு விழா நடைபெற்றது. விழாவில், சாதனை மாணவிக்கு ஆடை மற்றும் இனிப்புகள் வழங்கிப் பள்ளியின் தாளாளர், பள்ளி முதல்வர் மற்றும் ஆசிரியப் பெருமக்கள் அனைவரும் தங்களது மேலான வாழ்த்துகளையும், பாராட்டுக்களையும் தெரிவித்துக் கொண்டனர். 


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

K.CHINNADURAI & CO AND GOLD HOUSE

Sponsored Ads


Arputham Hospital







Thoothukudi Business Directory