» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

தூத்துக்குடியில் மருந்து வணிகர்கள் கடையடைப்பு போராட்டம் - மாவட்டத்தில் 450 மருந்தகங்கள் மூடல்!

புதன் 20, மே 2026 11:36:50 AM (IST)



ஆன்லைன் மருந்து விற்பனையை முற்றிலுமாகத் தடை செய்ய வலியுறுத்தி தூத்துக்குடி மாவட்ட மருந்து வணிகர்கள் சங்கம் சார்பில் இன்று மாவட்டம் முழுவதும் மருந்தகங்கள் பெருமளவில் மூடப்பட்டுள்ளது. 

ஆன்லைன் மருந்து விற்பனையை முற்றிலும் தடை செய்ய வேண்டும். வலி நிவாரணி மற்றும் தூக்க மாத்திரைகளை ஆன்லைனில் முறையற்ற முறையில் விற்பனை செய்வதைத் தடுக்க வேண்டும். புற்றுநோய், இதய நோய் போன்ற உயிர்காக்கும் மருந்துகளைத் தரமற்ற முறையில், காலாவதியான மருந்துகளை விற்று மக்கள் உயிரோடு விளையாடும் கார்ப்பரேட் நிறுவனங்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி நாடு முழுவதும்  மருந்து வணிகர்கள் கடையடைப்பு போராட்டம் நடத்தி வருகின்றனர். 

இதன்படி தூத்துக்குடி மாவட்டம் முழுவதும் மொத்தம் 450 மருந்து கடைகள் அடைக்கப்பட்டுள்ளன. தூத்துக்குடி மாநகர எல்லைக்குட்பட்ட பிரதான வணிகப் பகுதிகளில் உள்ள மற்றும் மருத்துவமனைகளின் அருகாமையில் அமைந்துள்ள சுமார் 150 மருந்து கடைகள் தங்களது விற்பனையை முற்றிலுமாக நிறுத்திப் போராட்டத்திற்கு முழு ஆதரவு அளித்துள்ளன.

கோவில்பட்டி, சாத்தான்குளம், திருச்செந்தூர், விளாத்திகுளம், உடன்குடி மற்றும் புதுக்கோட்டை உள்ளிட்ட மாவட்டத்தின் பிற உள்கட்டமைப்பு வட்டாரங்களிலும் மீதமுள்ள 300-க்கும் மேற்பட்ட கடைகள் முழுமையாக அடைக்கப்பட்டுள்ளதால், வணிகர்கள் சங்கத்தின் இந்த அறப்போராட்டம் மாவட்டத்தில் 100% முழு வெற்றியடைந்துள்ளது என மாவட்டத் தலைவர் ஜான்பிரிட்டோ மற்றும் செயலாளர் முனுசாமி ஆகியோர் தெரிவித்துள்ளனர்.


மக்கள் கருத்து

ஆமாமே 20, 2026 - 04:50:40 PM | Posted IP 172.7*****

சில மருந்துக்கள் எல்லாம் வெளியூரில் கார்போரேட் நிறுவனத்திடம் இருந்து வாங்கிக் கொண்டுவரப்பட்டது தானே. என்ன இது ?

மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

K.CHINNADURAI & CO AND GOLD HOUSE

Sponsored Ads






Arputham Hospital



Thoothukudi Business Directory