» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
வெளிநாட்டில் இருந்து திரும்பிய வாலிபர் தற்கொலை: போலீாசர் விசாரணை!
புதன் 6, மே 2026 8:26:15 AM (IST)
கழுகுமலை அருகே வாலிபர் ஒருவர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து போலீாசர் விசாரணை நடத்தி வருகிறார்.
தூத்துக்குடி மாவட்டம் கழுகுமலை அருகே உள்ள கே.லட்சுமிபுரம் காளியம்மன் கோவில் தெருவைச் சேர்ந்தவர் முத்து மகன் முத்துக்குமார் (26). இவர் வெளிநாட்டில் சுமார் 3 ஆண்டுகள் எலக்ட்ரீஷியனாக வேலை பார்த்துவிட்டு, கடந்த மாதம் தான் ஊருக்குத் திரும்பியுள்ளார்.
இந்த நிலையில், குடும்பப் பிரச்சினை காரணமாக மனமுடைந்த முத்துக்குமார், சம்பவத்தன்று தனது வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலைக்கு முயன்றுள்ளார். இதைக் கண்டு அதிர்ச்சியடைந்த பெற்றோர் மற்றும் உறவினர்கள் அவரை மீட்டு, சிகிச்சைக்காகக் கோவில்பட்டி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர்.
அங்கு அவருக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டது. பின்னர் மேல் சிகிச்சைக்காக நெல்லை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார். அங்கு அவருக்குத் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில், நேற்று மாலையில் சிகிச்சை பலனின்றி முத்துக்குமார் உயிரிழந்தார். இந்தச் சம்பவம் குறித்துக் கழுகுமலை போலீஸ் இன்ஸ்பெக்டர் ஜெயலட்சுமி வழக்குப் பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகிறார்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

பூட்டிய வீட்டின் சாவியை எடுத்து 3 பவுன் நகை, ரூ.7,000 திருட்டு - மர்ம நபர்கள் கைவரிசை!
செவ்வாய் 19, மே 2026 12:44:14 PM (IST)

சுற்றுலா வேன் விபத்து கணவன் - மனைவி பலி : 13 பேர் படுகாயம்!
செவ்வாய் 19, மே 2026 12:33:28 PM (IST)

தூத்துக்குடியில் மே 22ல் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம்: ஆட்சியர் விஷு மகாஜன் தகவல்
செவ்வாய் 19, மே 2026 12:13:17 PM (IST)

மனைவி பிரிந்து சென்றதால் கணவர் தற்கொலை!
செவ்வாய் 19, மே 2026 12:11:43 PM (IST)

ஓடும் ரயிலில் புகுந்து அடுத்தடுத்து 2 பேரிடம் நகை, செல்போன் பறிப்பு: 4 பேர் கும்பலுக்கு போலீஸ் வலைவீச்சு!
செவ்வாய் 19, மே 2026 12:03:18 PM (IST)

குடியிருப்பு அருகே குவிக்கப்படும் குப்பைகள்! – நோய் பரவும் அபாயத்தால் பொதுமக்கள் பீதி!
செவ்வாய் 19, மே 2026 11:20:16 AM (IST)










