» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
தூத்துக்குடியில் மீனவருக்கு கத்திக்குத்து: 3 பேர் கைது
புதன் 6, மே 2026 12:10:26 PM (IST)
தூத்துக்குடியில் முன்விரோதம் காரணமாக மீனவரை கத்தியால் தாக்கிய 3 பேரை போலீசார் கைது செய்தனர்.
தூத்துக்குடி தாளமுத்துநகர் கணபதி நகரைச் சேர்ந்தவர் வினோத் (32). மீனவரான இவருக்குத் திருமணமாகி மனைவியும், 2 குழந்தைகள் உள்ளனர். நேற்று காலை கடலுக்குச் சென்றுவிட்டு, மாலை 7 மணியளவில் அவர் வீடு திரும்பிக் கொண்டிருந்தார். மொட்டைக் கோபுரம் அருகே அவர் வந்துகொண்டிருந்தபோது, அங்கு மறைந்திருந்த 3 பேர் கொண்ட கும்பல் அவரை வழிமறித்துள்ளது.
பின்னர் அவர்கள் வினோத்தைச் சரமாரியாகத் தாக்கி, கத்தியால் குத்தியுள்ளது. இதில் பலத்த காயமடைந்த அவர் தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இச்சம்பவம் குறித்துப் பெறப்பட்ட புகாரின் பேரில், தாளமுத்துநகர் இன்ஸ்பெக்டர் அருளப்பன் வழக்குப் பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டார்.
விசாரணையில், இத்தாக்குதலில் ஈடுபட்டது திரேஸ்புரத்தைச் சேர்ந்த கென்னடி மகன் பிரசாந்த் (25), சுனாமி காலனியைச் சேர்ந்த மைக்கேல் மகன் ஜேம்ஸ் (25) மற்றும் மாதவன் நாயர் காலனியைச் சேர்ந்த ஜார்ஜ் மகன் சூசைய்யா (47) என்பது தெரியவந்தது.
இவர்களுக்கும் வினோத்தின் தம்பிக்கும் இடையே ஏற்கனவே முன்விரோதம் இருந்து வந்துள்ளது. இதன் காரணமாகவே அவர்கள் மூவரும் வினோத்தை தாக்கியது முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. பிடிபட்ட மூன்று பேரையும் போலீசார் கைது செய்து மேல் விசாரணை நடத்தி வருகின்றனர்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக அகற்ற நடவடிக்கை - முதல்வர் விஜய்க்கு கோரிக்கை!
செவ்வாய் 19, மே 2026 3:16:18 PM (IST)

பூட்டிய வீட்டின் சாவியை எடுத்து 3 பவுன் நகை, ரூ.7,000 திருட்டு - மர்ம நபர்கள் கைவரிசை!
செவ்வாய் 19, மே 2026 12:44:14 PM (IST)

சுற்றுலா வேன் விபத்து கணவன் - மனைவி பலி : 13 பேர் படுகாயம்!
செவ்வாய் 19, மே 2026 12:33:28 PM (IST)

தூத்துக்குடியில் மே 22ல் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம்: ஆட்சியர் விஷு மகாஜன் தகவல்
செவ்வாய் 19, மே 2026 12:13:17 PM (IST)

மனைவி பிரிந்து சென்றதால் கணவர் தற்கொலை!
செவ்வாய் 19, மே 2026 12:11:43 PM (IST)

ஓடும் ரயிலில் புகுந்து அடுத்தடுத்து 2 பேரிடம் நகை, செல்போன் பறிப்பு: 4 பேர் கும்பலுக்கு போலீஸ் வலைவீச்சு!
செவ்வாய் 19, மே 2026 12:03:18 PM (IST)










