» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
மரம் அறுக்கும் இயந்திரத்தில் மின்சாரம் பாய்ந்து ஒருவர் உயிரிழப்பு: வடமாநில தொழிலாளி காயம்!
புதன் 6, மே 2026 8:16:49 AM (IST)
கோவில்பட்டி அருகே உள்ள மரம் அறுக்கும் தொழிற்சாலையில் ஏற்பட்ட மின் கசிவு காரணமாகத் தொழிலாளி ஒருவர் பரிதாபமாக உயிரிழந்தார்.
தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டியை அடுத்த தெற்குத் திட்டங்குளம் கோயில் தெருவைச் சேர்ந்தவர் பால்ராஜ் (58). இவர் வடக்கு திட்டங்குளத்தில் உள்ள மரம் அறுக்கும் தொழிற்சாலையில் தொழிலாளியாக வேலை செய்து வந்தார். நேற்று பால்ராஜ் பணியில் இருந்தபோது, மரம் அறுக்கும் இயந்திரத்தில் திடீரென மின் கசிவு ஏற்பட்டது.
இயந்திரத்தில் இருந்து மின்சாரம் பாய்ந்ததில் பால்ராஜ் மற்றும் அங்கிருந்த பீகாரைச் சேர்ந்த மற்றொரு தொழிலாளியான உபேந்திர மஞ்சி ஆகிய இருவரும் காயமடைந்தனர். உடனடியாகப் பால்ராஜ் கோவில்பட்டி அரசு மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டார். எனினும், அவரைப் பரிசோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாகத் தெரிவித்தனர்.
காயமடைந்த மற்றொரு தொழிலாளி உபேந்திர மஞ்சி, தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுச் சிகிச்சை பெற்று வருகிறார். இந்த விபத்து குறித்துக் கோவில்பட்டி கிழக்கு காவல் நிலைய போலீசார் வழக்குப் பதிவு செய்துள்ளனர். மரம் அறுக்கும் நிறுவனத்தை நடத்தி வரும் முருகனிடம் இது தொடர்பாகப் போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக அகற்ற நடவடிக்கை - முதல்வர் விஜய்க்கு கோரிக்கை!
செவ்வாய் 19, மே 2026 3:16:18 PM (IST)

பூட்டிய வீட்டின் சாவியை எடுத்து 3 பவுன் நகை, ரூ.7,000 திருட்டு - மர்ம நபர்கள் கைவரிசை!
செவ்வாய் 19, மே 2026 12:44:14 PM (IST)

சுற்றுலா வேன் விபத்து கணவன் - மனைவி பலி : 13 பேர் படுகாயம்!
செவ்வாய் 19, மே 2026 12:33:28 PM (IST)

தூத்துக்குடியில் மே 22ல் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம்: ஆட்சியர் விஷு மகாஜன் தகவல்
செவ்வாய் 19, மே 2026 12:13:17 PM (IST)

மனைவி பிரிந்து சென்றதால் கணவர் தற்கொலை!
செவ்வாய் 19, மே 2026 12:11:43 PM (IST)

ஓடும் ரயிலில் புகுந்து அடுத்தடுத்து 2 பேரிடம் நகை, செல்போன் பறிப்பு: 4 பேர் கும்பலுக்கு போலீஸ் வலைவீச்சு!
செவ்வாய் 19, மே 2026 12:03:18 PM (IST)










