» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

கழிவுநீர் கால்வாயில் விழுந்த ஆட்டை மீட்ட தீயணைப்பு வீரர்கள்: பொதுமக்கள் பாராட்டு!

சனி 25, ஏப்ரல் 2026 4:38:32 PM (IST)



தூத்துக்குடியில் கழிவுநீர் கால்வாய்க்குள் சிக்கிக்கொண்ட ஆடு ஒன்றை, தீயணைப்புத் துறையினர் 3 மணி நேரம் போராடி உயிருடன் மீட்டனர்.

தூத்துக்குடி மாநகராட்சிக்கு உட்பட்ட கால்டுவெல் காலனி ஒன்றாவது தெருவில் உள்ள கழிவுநீர் கால்வாயில், அப்பகுதியைச் சேர்ந்த ஒரு ஆடு எதிர்பாராதவிதமாகத் தவறி விழுந்தது. கால்வாய் குறுகலாகவும், ஆழமாகவும் இருந்ததால் ஆட்டினால் தானாக வெளியே வர முடியாமல் உள்ளேயே சிக்கிக்கொண்டது.

தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த தூத்துக்குடி தீயணைப்பு நிலையப் பணியாளர்கள் மீட்புப் பணியில் இறங்கினர். உதவி மாவட்ட அலுவலர்  கோமதி அமுதா தலைமையில் தீயணைப்பு வீரர்கள் சுமார் 3 மணி நேரம் போராடி எந்தவித காயமுமின்றி ஆட்டை பத்திரமாக உயிருடன் மீட்கப்பட்டது. 

மீட்கப்பட்ட ஆட்டினை அதன் உரிமையாளரிடம் தீயணைப்புத் துறையினர் ஒப்படைத்தனர். கழிவுநீர் கால்வாயில் தவித்த வாயில்லா ஜீவனைத் துரிதமாகச் செயல்பட்டு மீட்ட தீயணைப்புத் துறை அதிகாரிகளையும், பணியாளர்களையும் அப்பகுதி பொதுமக்கள் வெகுவாகப் பாராட்டினர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

K.CHINNADURAI & CO AND GOLD HOUSE

Sponsored Ads

Arputham Hospital






Thoothukudi Business Directory