» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
பைக் விபத்தில் வாலிபர் பலி - இருவர் படுகாயம் : குலசை கோவில் சென்று திரும்பியபோது சோகம்
சனி 25, ஏப்ரல் 2026 3:45:33 PM (IST)
ஆழ்வார்திருநகரி அருகே பைக் நிலைதடுமாறி கால்வாயில் பாய்ந்த விபத்தில் வாலிபர் பரிதாபமாக உயிரிழந்தார். அவரது நண்பர்கள் இருவர் படுகாயமடைந்தனர்.
தூத்துக்குடி மாவட்டம் ஸ்ரீவைகுண்டம் தாலுகா நளராஜபுரம், அம்மன் கோவில் தெருவைச் சேர்ந்த காட்டேரி பெருமாள் மகன் முத்துப்பாண்டி (21). இவர் தனது நண்பர்களான சிவகணேஷ் (19) மற்றும் இசக்கிராஜா (20) ஆகியோருடன் ஒரே பைக்கில் குலசேகரன்பட்டினம் கோவிலுக்குச் சென்றுள்ளார்.
சாமி தரிசனம் முடித்துவிட்டு இன்று ஊர் திரும்பிக் கொண்டிருந்தபோது, ஆழ்வார்திருநகரி அரசாங்க நகர் பகுதியில் வந்து கொண்டிருந்தனர். அப்போது, எதிர்பாராதவிதமாக இருசக்கர வாகனம் கட்டுப்பாட்டை இழந்து நிலைதடுமாறியது. இதில் சாலையோரம் இருந்த குத்துக்கல் மீது மோதி அருகில் இருந்த கால்வாய்க்குள் பைக் பாய்ந்தது.
இந்த கோர விபத்தில் முத்துப்பாண்டிக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டு சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். உடன் வந்த சிவகணேஷ் மற்றும் இசக்கிராஜாவிற்கு படுகாயம் ஏற்பட்டுள்ளது. தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த ஆழ்வார்திருநகரி போலீசார், காயமடைந்த இருவரையும் 108 ஆம்புலன்ஸ் மூலம் மீட்டு ஸ்ரீவைகுண்டம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
உயிரிழந்த முத்துப்பாண்டியின் உடல் பிரேதப் பரிசோதனைக்காக திருநெல்வேலி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. இச்சம்பவம் குறித்து ஆழ்வார்திருநகரி காவல் ஆய்வாளர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார். குலசை கோவிலுக்குச் சென்று திரும்பியபோது வாலிபர் விபத்தில் பலியான சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

கோவில் கொடை விழாவில் தகராறில் வாலிபருக்கு அரிவாள் வெட்டு: தூத்துக்குடியில் பரபரப்பு!
சனி 25, ஏப்ரல் 2026 5:04:13 PM (IST)

கழிவுநீர் கால்வாயில் விழுந்த ஆட்டை மீட்ட தீயணைப்பு வீரர்கள்: பொதுமக்கள் பாராட்டு!
சனி 25, ஏப்ரல் 2026 4:38:32 PM (IST)

தூத்துக்குடி மாவட்டத்தில் பதிவான வாக்குகள்: தொகுதி வாரியான தகவல்கள்!
சனி 25, ஏப்ரல் 2026 3:18:16 PM (IST)

வெல்டிங் ஒர்க்ஷாப் உரிமையாளர் தற்கொலை: தூத்துக்குடியில் பரிதாபம்!
சனி 25, ஏப்ரல் 2026 11:45:34 AM (IST)

ரயிலில் புகையிலை, குட்கா கடத்தியவர் கைது : கோவில்பட்டி ரயில் நிலையத்தில் சிக்கினார்!
சனி 25, ஏப்ரல் 2026 11:20:09 AM (IST)

தூத்துக்குடியில் ஒருவர் கட்டையால் தாக்கி கொலை : மதுபோதையில் நண்பர் வெறிச்செயல்!
சனி 25, ஏப்ரல் 2026 10:21:03 AM (IST)







