» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

திருட்டு வழக்கில் 3 குற்றவாளிகளுக்குக்கு தலா 6 ஆண்டுகள் சிறை - நீதிமன்றம் தீர்ப்பு

சனி 25, ஏப்ரல் 2026 10:10:05 AM (IST)

தூத்துக்குடி அருகே நடந்த திருட்டு வழக்கில் சம்பந்தப்பட்ட 3 குற்றவாளிகளுக்குக்கு தலா 6 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து ஓட்டப்பிடாரம் குற்றவியல் நீதித்துறை நடுவர் நீதிமன்றம் தீர்ப்பு அளித்தது.

கடந்த 2020ம் ஆண்டு புதியம்புத்தூர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட புதூர் பாண்டியார்புரம் சுங்கச்சாவடி அருகே தண்ணீர் பந்தல் to அரசடிபனையூர் வழியில் உள்ள ஒரு தனியார் குடோனின் ஷட்டரை உடைத்து உள்ளே சென்று அங்கு வைக்கப்பட்டிருந்த ரூபாய் 2,50,000/- மதிப்புள்ள 85 பட்டாணி பருப்பு மூடைகளை திருடிச் சென்ற வழக்கில்  தூத்துக்குடியைச் சேர்ந்த மாரிச்செல்வம் (35/26), ஸ்ரீவைகுண்டம் பகுதியை சேர்ந்தவர்களான பரமசிவன் (35/26)  மற்றும் அந்தோணி ராஜ் (35/26) ஆகிய மூன்று பேரையும் புதியம்புத்தூர் காவல் நிலைய போலீசார் கைது செய்தனர். 

மேற்படி வழக்கை காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு இறுதி அறிக்கையை நீதிமன்றத்தில் தாக்கல் செய்தனர். இவ்வழக்கின் விசாரணை ஓட்டப்பிடாரம் குற்றவியல் நீதித்துறை நடுவர் நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. இவ்வழக்கை விசாரித்த நீதிபதி பாக்கியராஜ்எதிரிகளான மாரிச்செல்வம் பரமசிவன் மற்றும் அந்தோணி ராஜ் ஆகியோரை குற்றவாளிகள் என உறுதி செய்து குடோனின் ஷட்டரை உடைத்து உள்ளே சென்றதற்கு தலா 3 ஆண்டுகள் சிறை தண்டனையும் ரூபாய் 2,000/- அபராதமும், குடோனில் வைக்கப்பட்டு இருந்த பட்டாணி மூடைகளை திருடியதற்காக தலா  3 ஆண்டுகள் சிறை தண்டனை மற்றும் ரூபாய் 2,000/- அபராதமும் விதித்து தீர்ப்பு வழங்கினார்.

இவ்வழக்கின் சாட்சிகளை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி குற்றவாளிக்கு தண்டனை பெற்று தந்த தூத்துக்குடி ஊரக உட்கோட்ட காவல் துணை கண்காணிப்பாளர்  சுதீர் மற்றும் இவ்வழக்கினை திறம்பட புலனாய்வு செய்த அப்போதைய காவல் ஆய்வாளர் வேல்முருகன், நீதிமன்றத்தில் சிறப்பாக வாதிட்ட அரசு தரப்பு வழக்கறிஞர் முருகேசன், வழக்கின் விசாரணைக்கு உதவியாக இருந்த தலைமை காவலர் தளவாய்ராஜ் ஆகியோரை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மதன் பாராட்டினார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

K.CHINNADURAI & CO AND GOLD HOUSE

Sponsored Ads


Arputham Hospital





Thoothukudi Business Directory