» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
வாக்கு எண்ணும் மையத்தில் 3அடுக்கு பாதுகாப்பு : வாக்குப்பதிவு இயந்திரங்கள் அறைக்கு சீல்!
வெள்ளி 24, ஏப்ரல் 2026 3:09:06 PM (IST)

தூத்துக்குடி வ.உ.சி அரசு பொறியியல் கல்லூரி வாக்கு எண்ணும் மையத்தில், வாக்குப்பதிவு இயந்திரங்கள் அனைத்தும் 3 அடுக்கு பாதுகாப்புடன் இருப்பறையில் வைக்கப்பட்டு முத்திரையிடப்பட்டன.
2026 தமிழ்நாடு சட்டமன்றப் பொதுத்தேர்தல் வாக்குப்பதிவு நிறைவடைந்த நிலையில், தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள 6 தொகுதிகளில் பயன்படுத்தப்பட்ட மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள், கட்டுப்பாட்டு இயந்திரங்கள் மற்றும் வாக்காளர் சரிபார்ப்பு இயந்திரங்கள் இன்று (ஏப்ரல் 24) பாதுகாப்பாக வைக்கப்பட்டன.
தூத்துக்குடி அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் உள்ள வ.உ.சி. அரசு பொறியியல் கல்லூரியில் அமைக்கப்பட்டிருந்த பாதுகாப்பு அறையில், மாவட்ட தேர்தல் அலுவலர் மற்றும் மாவட்ட ஆட்சியர் விஷு மகாஜன் தலைமையில், வேட்பாளர்கள் மற்றும் அவர்களது முகவர்கள் முன்னிலையில் இந்த இயந்திரங்கள் முத்திரையிடப்பட்டன. இந்த பாதுகாப்பு நடவடிக்கையை அந்தந்த தொகுதி தேர்தல் பொதுப் பார்வையாளர்கள் நேரில் பார்வையிட்டனர்.
இதில், விளாத்திகுளம் மற்றும் தூத்துக்குடி ஆகிய தொகுதிகளை எலுச்சூரி ரத்னாகர ராவ், திருச்செந்தூர் மற்றும் திருவைகுண்டம் ஆகிய தொகுதிகளை சோடிங்புயீ, ஒட்டப்பிடாரம் தொகுதியை அரவிந்த் குமார் வெர்மா ஆகியோர் பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.
வேட்பாளர்கள் மற்றும் அவர்களது முகவர்கள் முன்னிலையில், அனைத்து இயந்திரங்களும் முறையாகச் சரிபார்க்கப்பட்டு, பலத்த போலீஸ் பாதுகாப்போடு இருப்பறைகள் சீல் வைக்கப்பட்டன. தேர்தல் விதிமுறைகளின்படி, இந்த இருப்பறைகள் தொடர்ந்து 3 அடுக்கு காவல் பாதுகாப்பில் கண்காணிக்கப்படும் என்று தேர்தல் அதிகாரிகள் தெரிவித்தனர்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

கோவில் கொடை விழாவில் தகராறில் வாலிபருக்கு அரிவாள் வெட்டு: தூத்துக்குடியில் பரபரப்பு!
சனி 25, ஏப்ரல் 2026 5:04:13 PM (IST)

கழிவுநீர் கால்வாயில் விழுந்த ஆட்டை மீட்ட தீயணைப்பு வீரர்கள்: பொதுமக்கள் பாராட்டு!
சனி 25, ஏப்ரல் 2026 4:38:32 PM (IST)

பைக் விபத்தில் வாலிபர் பலி - இருவர் படுகாயம் : குலசை கோவில் சென்று திரும்பியபோது சோகம்
சனி 25, ஏப்ரல் 2026 3:45:33 PM (IST)

தூத்துக்குடி மாவட்டத்தில் பதிவான வாக்குகள்: தொகுதி வாரியான தகவல்கள்!
சனி 25, ஏப்ரல் 2026 3:18:16 PM (IST)

வெல்டிங் ஒர்க்ஷாப் உரிமையாளர் தற்கொலை: தூத்துக்குடியில் பரிதாபம்!
சனி 25, ஏப்ரல் 2026 11:45:34 AM (IST)

ரயிலில் புகையிலை, குட்கா கடத்தியவர் கைது : கோவில்பட்டி ரயில் நிலையத்தில் சிக்கினார்!
சனி 25, ஏப்ரல் 2026 11:20:09 AM (IST)







