» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
விசில் சின்னத்திற்கு வாக்களித்ததை வீடியோ எடுத்த பெண்: தேர்தல் அதிகாரிகள் விசாரணை!
வெள்ளி 24, ஏப்ரல் 2026 9:03:57 AM (IST)
தூத்துக்குடி சட்டமன்றத் தொகுதியில் தேர்தல் வாக்குப்பதிவு இயந்திரத்தில் ஒரு குறிப்பிட்ட சின்னத்திற்கு வாக்களிப்பதை வீடியோ எடுத்து சமூக வலைதளங்களில் பரவவிட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தமிழக சட்டமன்றத் தேர்தல் வாக்குப்பதிவு நேற்று நடந்து முடிந்த நிலையில், தூத்துக்குடியில் ஒரு வீடியோ வைரலாகி வருகிறது. அதில், ஒரு பெண் வாக்காளர் வாக்குப்பதிவு இயந்திரத்தில் தமிழக வெற்றிக் கழக (த.வெ.க) வேட்பாளர் ஸ்ரீநாத்தின் 'விசில்' சின்னத்திற்கு வாக்களிப்பது போன்ற காட்சிகள் இடம்பெற்றுள்ளன.
மேலும் அந்த வீடியோவின் பின்னணியில், "ஜெயிச்சிடுவேல்லா சாமி, ஊரே உனக்காக வேண்டுது சாமி" என்ற சினிமா வசனமும் ஒலிக்கவிடப்பட்டுள்ளது. இந்த வீடியோ த.வெ.க-வினரின் வாட்ஸ்-அப் குழுக்களில் அதிவேகமாகப் பகிரப்பட்டு வருகிறது.
வாக்குச்சாவடி மையங்களுக்குள் செல்போன் கொண்டு செல்ல தேர்தல் ஆணையம் கடுமையான தடை விதித்துள்ளது. மேலும், தான் யாருக்கு வாக்களித்தோம் என்பதைப் புகைப்படம் அல்லது வீடியோ எடுத்து வெளியிடுவது வாக்கு ரகசியத்தை மீறும் செயலாகும். மக்கள் பிரதிநிதித்துவச் சட்டத்தின்படி இது தண்டனைக்குரிய குற்றமாகும்.
கடுமையான சோதனைகளையும் மீறி வாக்குச்சாவடிக்குள் செல்போன் கொண்டு சென்றது எப்படி? இந்த வீடியோ எப்போது, எந்த வாக்குச்சாவடியில் எடுக்கப்பட்டது? என்பது குறித்துத் தேர்தல் அதிகாரிகள் மற்றும் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
தூத்துக்குடி தொகுதியில் திமுக, அதிமுக, நாம் தமிழர் மற்றும் த.வெ.க எனப் பலமுனைப் போட்டி நிலவும் சூழலில், இந்த வீடியோ விவகாரம் மாவட்ட தேர்தல் களத்தில் பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

கோவில் கொடை விழாவில் தகராறில் வாலிபருக்கு அரிவாள் வெட்டு: தூத்துக்குடியில் பரபரப்பு!
சனி 25, ஏப்ரல் 2026 5:04:13 PM (IST)

கழிவுநீர் கால்வாயில் விழுந்த ஆட்டை மீட்ட தீயணைப்பு வீரர்கள்: பொதுமக்கள் பாராட்டு!
சனி 25, ஏப்ரல் 2026 4:38:32 PM (IST)

பைக் விபத்தில் வாலிபர் பலி - இருவர் படுகாயம் : குலசை கோவில் சென்று திரும்பியபோது சோகம்
சனி 25, ஏப்ரல் 2026 3:45:33 PM (IST)

தூத்துக்குடி மாவட்டத்தில் பதிவான வாக்குகள்: தொகுதி வாரியான தகவல்கள்!
சனி 25, ஏப்ரல் 2026 3:18:16 PM (IST)

வெல்டிங் ஒர்க்ஷாப் உரிமையாளர் தற்கொலை: தூத்துக்குடியில் பரிதாபம்!
சனி 25, ஏப்ரல் 2026 11:45:34 AM (IST)

ரயிலில் புகையிலை, குட்கா கடத்தியவர் கைது : கோவில்பட்டி ரயில் நிலையத்தில் சிக்கினார்!
சனி 25, ஏப்ரல் 2026 11:20:09 AM (IST)







