» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
பஸ் டயரில் சிக்கி 2 வயது பெண் குழந்தை பலி : தந்தை கண் எதிரிலேயே சோகம்!
வெள்ளி 24, ஏப்ரல் 2026 8:44:42 AM (IST)
உடன்குடி அருகே அரசுப் பேருந்தை முந்திச் செல்ல முயன்றபோது, இருசக்கர வாகனத்தில் இருந்து தவறி விழுந்த 2 வயதுக் குழந்தை பேருந்து சக்கரத்தில் சிக்கி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தது.
தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளம் அருகே உள்ள தச்சன்மொழியைச் சேர்ந்தவர் பேச்சிமுத்து. இவர் அப்பகுதியில் உள்ள கோவிலில் ஓதுவாராகப் பணியாற்றி வருகிறார். நேற்று (வியாழக்கிழமை) இவர் தனது 2 வயது மகள் மகிழினியுடன் இருசக்கர வாகனத்தில் உடன்குடி பஜாருக்குச் சென்றுவிட்டு மீண்டும் சாத்தான்குளம் நோக்கித் திரும்பிக் கொண்டிருந்தார்.
உடன்குடி - திசையன்விளை சாலையில் சென்று கொண்டிருந்தபோது, முன்னால் சென்ற அரசுப் பேருந்தை பேச்சிமுத்து முந்திச் செல்ல முயன்றுள்ளார். அப்போது எதிர்பாராதவிதமாகத் தந்தைக்கும் மகளுக்கும் இடையே சமநிலை தவறியதில், குழந்தை மகிழினி வண்டியில் இருந்து நிலைதடுமாறி கீழே விழுந்துள்ளார். துரதிர்ஷ்டவசமாகப் பேருந்தின் பின்சக்கரம் குழந்தையின் தலை மீது ஏறியதில், தலை நசுங்கி அந்த இடத்திலேயே குழந்தை பரிதாபமாக உயிரிழந்தது.
தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த குலசேகரன்பட்டினம் காவல் ஆய்வாளர் பிரபு பாஸ்கரன், குழந்தையின் உடலைக் கைப்பற்றிப் பிரேதப் பரிசோதனைக்காக அனுப்பி வைத்தார். மேலும், விபத்தை ஏற்படுத்திய அரசுப் பேருந்தின் ஓட்டுநரான திருநெல்வேலி மாவட்டம் சங்கர் நகரைச் சேர்ந்த கருப்பசாமி (38) என்பவரைப் பிடித்துப் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
கண் இமைக்கும் நேரத்தில் நேர்ந்த இந்த விபத்தில் பச்சிளம் குழந்தை உயிரிழந்த சம்பவம் உடன்குடி மற்றும் தச்சன்மொழி பகுதிகளில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

கோவில் கொடை விழாவில் தகராறில் வாலிபருக்கு அரிவாள் வெட்டு: தூத்துக்குடியில் பரபரப்பு!
சனி 25, ஏப்ரல் 2026 5:04:13 PM (IST)

கழிவுநீர் கால்வாயில் விழுந்த ஆட்டை மீட்ட தீயணைப்பு வீரர்கள்: பொதுமக்கள் பாராட்டு!
சனி 25, ஏப்ரல் 2026 4:38:32 PM (IST)

பைக் விபத்தில் வாலிபர் பலி - இருவர் படுகாயம் : குலசை கோவில் சென்று திரும்பியபோது சோகம்
சனி 25, ஏப்ரல் 2026 3:45:33 PM (IST)

தூத்துக்குடி மாவட்டத்தில் பதிவான வாக்குகள்: தொகுதி வாரியான தகவல்கள்!
சனி 25, ஏப்ரல் 2026 3:18:16 PM (IST)

வெல்டிங் ஒர்க்ஷாப் உரிமையாளர் தற்கொலை: தூத்துக்குடியில் பரிதாபம்!
சனி 25, ஏப்ரல் 2026 11:45:34 AM (IST)

ரயிலில் புகையிலை, குட்கா கடத்தியவர் கைது : கோவில்பட்டி ரயில் நிலையத்தில் சிக்கினார்!
சனி 25, ஏப்ரல் 2026 11:20:09 AM (IST)







